»   »  'ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே' சிம்புவின் காதலை போட்டிபோட்டு கொண்டாடும் ரசிகர்கள்

'ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே' சிம்புவின் காதலை போட்டிபோட்டு கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே' என்று பலரையும் பைத்தியம் பிடிக்க வைத்த விண்ணைத்தாண்டி வருவாயா, இன்று 6 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

சிம்புவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் பாரபட்சம் பாராமல் பலரையும் புரட்டிப் போட்டது.


இந்நிலையில் ரசிகர்கள் மனங்கவர்ந்த இப்படம் இன்று 6 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் #6yearsofvtv என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.


ரசிகர்களின் கொண்டாட்டத்தில் இருந்து ஒருசில பதிவுகளை இங்கே காணலாம்.


மேலும் மேலும்

பல சண்டியர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட இப்படம் இந்த சண்டியரையும் விட்டு வைக்கவில்லை போலும்.


பிரியாணி இருக்கா

படத்தில் இடம்பெறும் பிரியாணி இருக்கா? வசனத்தைப் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா.


நான் ஏன் உன்ன

நான் ஏன் உன்ன லவ் பண்ணேன் ஜெஸ்சி? வசனத்தை தனக்குப் பிடித்த வசனமாக பதிவு செய்திருக்கிறார் பில்லா வினோத்.


காதல தேடிட்டுப் போக

"காதல தேடிட்டு போக முடியாது... அது நிலைக்காது" என்ற தத்துவமான வசனத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் தாமோதரன்.


இப்படி ஒரு படம்

இப்படி ஒரு படம் இனிமேல் வராது என்று பெருமைப் பட்டிருக்கிறார் அனு.


உன்னைத் தாண்டி

'உயிரே உன்னை உன்னை' பாடலில் தனக்குப் பிடித்த வரிகளை ஜிப் பார்மேட்டில் பகிர்ந்து இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டிருக்கிறார் அயன்.


இதேபோல ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருவதால், ட்விட்டரில் இன்னும் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது #6yearsofvtv ஹெஷ்டேக்.English summary
Simbu, Trisha Starrer Vinnaithandi Varuvaya Today Entered 6th Year, Now Fans Celebrating in All Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil