»   »  நேர்மை, நம்பிக்கை மீறல்: அமலா பால் பற்றி விஜய் என்ன சொல்ல வருகிறார்?

நேர்மை, நம்பிக்கை மீறல்: அமலா பால் பற்றி விஜய் என்ன சொல்ல வருகிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்பிக்கை, நேர்மை இரண்டும் மீறப்பட்டு இல்லாமல் போனதால் அமலா பாலை பிரிவதாக இயக்குனர் ஏ.எல். விஜய் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார்?

திருமணமான இரண்டே ஆண்டுகளில் நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ.எல். விஜய்யும் பிரிந்துவிட்டனர். திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று கூறியும் அமலா தொடர்ந்து நடித்ததால் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

What does Vijay say about Amala Paul?

அதன் பிறகு அமலா இளம் நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பிரிந்துவிட்டதாக பேச்சப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தவை:

* விவாகரத்து பற்றி நான் எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று முதலில் விஜய் தெரிவித்தார்.

* அமலா தொடர்ந்து நடித்ததால் ஒன்றும் அவரை பிரியவில்லை. மேலும் அவர் எந்த நடிகரின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று கூறினார் விஜய்.

* அமலா நடிப்பை தொடர நான் ஆதரவு தெரிவித்தேன். நானே அவரை படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்று வந்தேன். அவர் நடிப்பதால் எல்லாம் பிரச்சனை இல்லை என்று

விஜய் கூறினார்.

* நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் மீறப்பட்டு அவை இல்லாமல் போனதால் அமலா பாலை பிரிந்தேன் என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

* நம்பிக்கை, நேர்மை மீறல் அப்படி என்றால் விஜய் எதையோ சூசகமாக கூற வருகிறார். என்ன தான் சொல்ல வருகிறார்? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

English summary
Director AL Vijay said he has to leave Amala Paul as honesty and trust have been breached. What is he trying to say?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil