கைவசம் ஏராளமான படங்கள்.. அடுத்த 3 ஆண்டுகளுக்கு படங்களை இயக்கும் எண்ணமில்லை.. பிரபல நடிகர் தகவல்!
சென்னை: அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எந்தப் படத்தையும் இயக்கும் திட்டமில்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். எந்த மாதிரியான கதைக்களம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
நகரத்து இளைஞன், கிராமத்து இளைஞன், கேங்ஸ்டர், அரசியல்வாதி என எப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்றாலும் எதார்த்தமான நடிப்பால் ரகளை செய்து விடுகிறார்.

நல்ல வரவேற்பு
தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என்றும் பிஸியாக உள்ளார் தனுஷ். கடைசியாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜகமே தந்திரம்
இதனை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜுடன் கூட்டணி வைத்துள்ளார் தனுஷ். அந்தப் படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

ஜகமே தந்திரம் 2
இந்தப் படத்தில் சுருளி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் சுருளி கதாப்பாத்திரம் பிடித்துப்போனதால் அதன் சீக்குவலை எடுக்க இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் தனுஷ்.

இயக்கம் எப்போது?
கார்த்திக் நரேன் படத்திலும் நடிக்கிறார் தனுஷ். இந்நிலையில் நடிகர் தனுஷ் அடுத்து எப்போது படத்தை இயக்குவார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்தடுத்து பல படங்கள் கைவசம் உள்ளதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு படங்களை இயக்கும் திட்டமில்லை என தனுஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











