»   »  நடிகர் ரன்வீர் சிங்கை வாய் பிளக்க வைத்த தீபிகா, பிரியங்கா!

நடிகர் ரன்வீர் சிங்கை வாய் பிளக்க வைத்த தீபிகா, பிரியங்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாஜிராவ் மஸ்தானி படத்திற்காக தீபிகாவும், பிரியங்கா சோப்ராவும் சேர்ந்து நடனமாடியதை பார்த்து தான் அசந்துவிட்டதாக நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

நடிகை அனுஷ்கா சர்மாவை பிரிந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் தீபிகா படுகோனேவுடன் நடித்தார். அந்த படத்தில் நடிக்கையில் ரன்வீரும், தீபிகாவும் காதலிக்கத் துவங்கினர். ராம் லீலா படம் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் அதே சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர், தீபிகா மற்றும் பிரியங்கா சோப்ராவை வைத்து பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ரன்வீர்

ரன்வீர்

ரன்வீர் சிங்கிற்கு கையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து ரன்வீர் ஓய்வில் உள்ளார். அவர் ஓய்வில் இருக்கையில் அவர் சம்பந்தப்படாத காட்சிகளை படமாக்கி வருகிறார் பன்சாலி.

தீபிகா-பிரியங்கா

தீபிகா-பிரியங்கா

ரன்வீர் இல்லாத நேரத்தில் பன்சாலி தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடனமாடும் பாடல் காட்சியை படமாக்கியுள்ளார். அந்த பாடல் காட்சியை ரன்வீருக்கு போட்டுக் காட்டியுள்ளனர்.

சூப்பர்

சூப்பர்

தீபிகாவும், பிரியங்காவும் சேர்ந்து டான்ஸ் ஆடியதை பார்த்தபோது மேஜிக் போன்று இருந்தது. அவர்களின் நடனத்தை பார்த்து அசந்து போய்விட்டேன் என்று ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

டான்ஸ்

டான்ஸ்

சிறப்பாக ஆட வேண்டுமே என்று தீபிகாவும், பிரியங்காவும் மெனக்கெட்டுள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் நடித்தாலே ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வர மெனக்கெட வேண்டும் என்கிறார் ரன்வீர்.

English summary
Actor Ranveer Singh told that his jaw was dropped after seeing dance number in which Deepika Padukone and Priyanka Chopra performed very well for the upcoming movie Bajirao Mastani.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil