»   »  'அம்மா'வின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற த்ரிஷாவுக்கு இப்படியொரு சோதனையா?

'அம்மா'வின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற த்ரிஷாவுக்கு இப்படியொரு சோதனையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலை காண முடியாமல் கனத்த இதயத்துடன் திரும்பிச் சென்றதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை காண மக்கள் கூட்டம் அலை, அலையாக திரண்டது.

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மட்டும் பிரச்சனையின்றி அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

த்ரிஷா

த்ரிஷா

நடிகை த்ரிஷாவும் தனக்கு மிகவும் பிடித்த அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு வந்துள்ளார். அங்கிருந்த கூட்ட நெரிசலில் சிக்கிய அவரால் அம்மாவின் உடல் அருகே செல்ல முடியவில்லை.

கனத்த இதயம்

அம்மாவை பார்க்க முடியாதது குறித்து த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அம்மாவின் உடல் அருகே செல்ல முடியவில்லை. கனத்த இதயத்துடன் திரும்பிச் சென்றேன். என் நகரை இது போன்று பார்த்தது இல்லை. சென்னை இனி முன்பு போன்று இருக்காது என தெரிவித்துள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வந்து அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் த்ரிஷா மட்டும் கூட்டப் பிரச்சனையால் அம்மாவின் உடல் அருகே செல்ல முடியாமல் போயுள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

ஜெயலலிதாவின் உடலை ராஜாஜி ஹாலில் இருந்து தூக்கிச் செல்ல சில நிமிடங்கள் இருந்தபோது அவரை காணும் ஆர்வத்தில் பொதுமக்கள் விஐபிகளின் வரிசையில் புகுந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு வேளை த்ரிஷா அந்த நேரம் பார்த்து வந்திருப்பார் போன்று.

English summary
Trisha was not able to pay homage to her beloved iron lady Amma because of the crowd and chaos.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil