Don't Miss!
- News
நான் சுயநலத்திற்காக செயல்படவில்லை.. என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.. தமிழிசை
- Finance
கூகுள் $17 பில்லியன் லாபம் பார்த்திருக்கு.. பணி நீக்கத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது..!
- Sports
வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லன் யார்?...இது என்ன புது ட்விஸ்ட்?...இதை யாருமே சொல்லலியே
சென்னை : விஜய் தற்போது பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி, ஏற்கனவே தமிழில் கார்த்தி - நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான்.
வாரிசு படத்தின் ஷுட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது. இதே போல் வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள், வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. இதனால் படக்குழு மீது விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கப்பட்ட ஷுட்டிங் 2 நாட்களுக்கு முன்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்த கட்ட ஷுட்டிங் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எங்கு நடக்க போகிறது, எப்போது துவங்க போகிறார்கள் என எந்த தகவலும் வெளியாகவில்லை.

எஸ்.ஜே.சூர்யா ரோல் என்ன
இதுவரை வெளியான தகவலின் படி, வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பு, சம்யுக்தா ஷாம், சங்கீதா கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மிக முக்கியமாக ரோலில் எஸ்.ஜி.சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.

விஜய்யின் ரோல் இது தான்
இதே போல் வாரிசு படத்தில் விஜய்யின் கேரக்டரின் பெயர் விஜய் ராஜேந்திரன். இவர் ஆப் டெவலப்பர் வேலை செய்பவராக நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. விஜய்யின் அப்பாவின் நிறுவனத்தின் பெயர் ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்றும் தகவல் வெளியானது. இதே போல் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இதில் ஒரு கேரக்டர் ஆக்ஷன் ஹீரோ என்றும், மற்றொருவர் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா என்றும் சொல்லப்படுகிறது.

வில்லன் யாருன்னு சொல்லவேயில்லையே
வாரிசு படத்தில் சரத்குமார், விஜய்யின் அப்பாவாக நடிக்கிறார், ஜெயசுதா அம்மாவாக நடிக்கிறார், ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் ஆகியோர் சகோதரர்களாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த படத்தில் வில்லன் யார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் வில்லன் இல்லை என ஏற்கனவே சொல்லி விட்டார்கள். இதனால் யார் வில்லன் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

அப்போ இவர் தான் வில்லனா?
படத்தில் இரண்டு விஜய் உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு விஜய் பற்றிய தகவல்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மற்றொரு விஜய் பற்றிய தகவல்கள் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமவில் சமீப காலமாக ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடித்தால், ஒன்று நெடிவ் கேரக்டரில் நடிக்கும் டிரெண்ட் அதிகரித்து வருவதால் மற்றொரு விஜய், வில்லனாக இருக்கலாம் என நெட்டிசன்கள் தகவல் பரப்பி வருகின்றனர்.

இதை யாருமே எதிர்பார்க்கலியே
இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக உள்ளது. விஜய் ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படத்தில் இரட்டை வேடத்திலும், ஒரு கேரக்டர் நெகடிவ் ரோலிலும் நடித்துள்ளார். இதனால் இந்த படத்திலும் அவர் நெடிவ் ரோல் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும், அதனால் தான் மற்றொரு கேரக்டரை சஸ்பென்சாக வைத்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.