தனுஷ் படத்தை இயக்கவுள்ளாரா அருண் மாதேஸ்வரன்?.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய கர்ணன் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது The Gray Man எனும் ஹாலிவுட் படத்தின் படபிடிப்புக்காக வெளிநாட்டில் உள்ளார்.
இந்நிலையில் தனுஷின் 47வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு படங்கள்
தனுஷின் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக ஜகமே தந்திரம் Netflix ல் வெளிவரவுள்ளது (ரிலிஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை) அடுத்ததாக Atrangi Re எனும் பாலிவுட் திரைப்படம் ஆகஸ்ட் 6ம் தேதி வெளிவரவுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என செம பிசியாக உள்ள தனுஷ், The Gray Man படப்பிடிப்பை முடித்த பின்னர் நாடு திரும்பவுள்ளார். நாடு திரும்பியவுடன் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தற்போது செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து சாணி காயிதம் படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இவரின் இயக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்ட ராக்கி படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
Recommended Video

கசிந்த தகவல்கள்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இதுவரை படங்கள் வெளியாகவில்லை என்றாலும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தனுஷின் 47வது படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











