Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மறுபடியும் வலிமை வைப்ரேஷன் வருதே.. பொங்கலுக்கு தள்ளிப் போகிறதா ஏகே61? விஜய்யுடன் மோதுவாரா?
சென்னை: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் தீபாவளி ரிலீஸ் என அறிவித்துள்ள நிலையில், ஏகே61 படம் தீபாவளிக்கு வெளியாகாது என தகவல்கள் கசிந்துள்ளன.
Recommended Video
பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே இன்று வெளியாக போகிறது.
ஆனால், இன்னமும் ஏகே61 படத்தின் எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் 'ஏகே 61' படத்துடன் மோதும்.. சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு !

பைக் டூர்
இங்கிலாந்து, ஐரோப்பா என தனக்கு மிகவும் பிடித்தமான பைக் டூரை செய்து வருகிறார் நடிகர் அஜித். விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அதை தடுக்கவே இப்படி அஜித்தின் போட்டோக்கள் வெளியாவதாக விஜய் ரசிகர்கள் சண்டை பிடித்து வருகின்றனர். பைக் டூரை தாண்டி, சொகுசு படகில் செம ஸ்மார்ட்டாக அஜித் பயணம் செல்லும் புகைப்படங்களும் டிரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகின்றன.

தீபாவளிக்கு பிரின்ஸ்
நடிகர் கார்த்தியின் விருமன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படு ஜாலியாக சத்யராஜை கலாய்த்து அவர் தான் தாமதத்திற்கு காரணம் என வீடியோ வெளியிட்டு சிவகார்த்திகேயன் தீபாவளி பண்டிகையை தனதாக்க திட்டமிட்டுள்ளார்.

கார்த்தியுடன் கிளாஷ்
விருமன் படத்தில் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகவுள்ள நிலையில், போட்டி வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறாரா சிவகார்த்திகேயன்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், வரும் தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் படத்துடன் மோதப் போவது உறுதியாகி உள்ளது.

வலிமை வைப்ரேஷன்
கடந்த ஆண்டு இதே போலத்தான் அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு வருகிறது என நடிகர் அஜித் பைக் டூர் செய்த புகைப்படங்கள் டிரெண்டாகின. ஆனால், கடைசியில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு கன்ஃபார்ம் ஆன நிலையில், பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் தள்ளிப் போனது. தற்போதும் அதே வைப்ரேஷன் தான் வருகிறது என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

விஜய்யுடன் மோதுவாரா
அஜித்தின் படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை என்பது தெரிந்த பின்னர் தான் சிவகார்த்திகேயன் தீபாவளி ரிலீஸை உறுதிப்படுத்தி உள்ளார் எனக் கூறுகின்றனர். தீபாவளி ரிலீஸ் இல்லை என்றால், டிசம்பருக்கு ஏகே 61 வெளியாகுமா? என்கிற கேள்வியும் அப்படி இல்லையென்றால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யுடன் மோதுவாரா அஜித் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

எந்த அப்டேட்டும் இல்லை
போனி கபூர் வலிமை படத்துக்கு என்ன பண்ணாரோ தற்போதும் அதையே பண்ணி வருகிறார் என அஜித் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே வெளியாக உள்ள நிலையில், தீபாவளிக்கு வரப் போவதாக அறிவித்திருந்த அஜித் படத்திற்கு ஏன் இன்னமும் எந்தவொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பான் இந்தியாவுக்கு வாய்ப்பில்லை
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் - அஜித் நடித்தால் நல்லா இருக்கும் என கங்கை அமரன் நினைத்து வெளியிட்ட தகவல் காட்டுத் தீயாய் பரவிய நிலையில், இருவரும் இணைந்து பான் இந்தியா படம் பண்ண போவதாக ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை, இங்கே எப்போதும் அஜித் - விஜய் போட்டி மட்டுமே நிலவும் என்பது தான் தெரிகிறது என விமர்சகர்கள் விளாசி வருகின்றனர்.