OTT: ‘பிளாக் மெயில்‘ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?
சென்னை: 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' & 'கண்ணை நம்பாதே' படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார், தேஜு அஸ்வினி நடித்த பிளாக்மெயில் திரைப்படம் கடந்த செப்டம்பர் 12ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவை விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ், டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறினார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரின் நடிப்பில் மட்டும் நான்கு திரைப்படங்கள் வெளியாகின. இதையடுத்து, இயக்குநர் மாறன் பிளாக் மெயில் என்ற படத்தை இயக்கினார். ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ்குமார்,ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

பிளாக் மெயில்: மருந்தக குடோனில் பணியாற்றி வரும் ஜி.வி.பிரகாஷ், பல மருந்தகங்களுக்கு மருந்துகளை கொண்டு செல்கிறார். அப்படி ஒரு மெடிக்கல் ஷாப்பில் தேஜு அஸ்வினி வேலை செய்கிறார். வேலை சம்மந்தமாக இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள அது காதலாக மாறுகிறது. ஜிவி பிரகாஷ், மருந்து கொண்டு செல்லும் போது அவரின் வாகனம் ஒரு நாள் திருட்டுப் போகிறது. அதற்குள் முக்கியமான பொருள் இருப்பதாகச் சொல்லும் உரிமையாளர், ஜிவி பிரகாஷின் காதலியான தேஜு அஸ்வினி கடத்தி வைத்துக் கொண்டு, பொருளைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டு அவளை மீட்டு செல்லுமாறு பிளாக்மெயில் செய்கிறார்.
ஓடிடி தேதி அறிவிப்பு: இப்படி ஒரு பக்கம் கதை சென்று கொண்டு இருக்க, மறுபக்கம் தொழிலதிபர் அசோக்கின் குழந்தை காணாமல் போகிறது. அவரிடம் ஒரு கும்பல், பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறது. அசோக்கின் மனைவியை, அவரின் முன்னாள் காதலன், வேறு விதத்தில் பிளாக்மெயில் செய்கிறான். இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருப்பது யார்? எதற்காக இவர்கள் பிளாக் மெயில் செய்கிறார்கள்? குழந்தை மீட்கப்பட்டதா? ஜிவி பிரகாஷ் தனது காதலியை எப்படி மீட்டார் என்பது தான் பிளாக் மெயில் திரைப்படத்தின் கதை. இயக்குநர் மு.மாறன் தனது முந்தைய படங்களைப் போலவே இந்த படத்தையும், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கொடுத்துள்ளார். இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில், பிளாக் மெயில் திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











