»   »  ஷூட்டிங்ஸ்பாட்டில் பேசாத விஜய்யையே அரட்டையடிக்க வைத்த கீர்த்தி

ஷூட்டிங்ஸ்பாட்டில் பேசாத விஜய்யையே அரட்டையடிக்க வைத்த கீர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷூட்டிங்ஸ்பாட்டில் பேசாமல் அமைதியாக இருக்கும் விஜய்யையே கீர்த்தி சுரேஷ் அரட்டையடிக்க வைத்துள்ளார்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பைரவா. கீர்த்தி முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். விஜய்யுடன் சேர்ந்து நடிக்க பயமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


நடிக்க பயமில்லை ஆனால் டான்ஸ் ஆடத் தான் பயமாக உள்ளது என்கிறார் கீர்த்தி.


விஜய்

விஜய்

படப்பிடிப்பு தளத்தில் விஜய் தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஸ்பாட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பார்.


கீர்த்தி

கீர்த்தி

கீர்த்தி கேரளா என்றாலும் தமிழ் நன்றாகத் தெரியும். ஷூட்டிங்ஸ்பாட்டில் அரட்டையடிக்கும் அவர் அமைதியாக இருந்த விஜய்யிடம் சென்று பேசியுள்ளார். அதன் பிறகு விஜய்யும் கீர்த்தியுடன் சேர்ந்து அரட்டையடித்துள்ளார்.


ஆச்சரியம்

ஆச்சரியம்

எப்பொழுதும் அமைதியாக இருக்கும் விஜய் கீர்த்தியுடன் அரட்டையடித்ததை பார்த்த படக்குழுவினரால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு ஆச்சரியப்பட்டுள்ளனர்.


தெளிவு தான்

தெளிவு தான்

இளைய தளபதியையே பேச வைத்துவிட்டது இந்த வாயாடி பொண்ணு. இது கண்டிப்பா கோலிவுட்டில் பிழைத்துக் கொள்ளும் என செய்தி அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


English summary
Keerthy Suresh has made Vijay chat on the sets of their upcoming movie Bairavaa. Vijay is known for being quiet in the shootingspot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil