»   »  சிம்ரனின் "கிச்சா வயசு 16 ரெடி!

சிம்ரனின் "கிச்சா வயசு 16 ரெடி!

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக சிம்ஸின் "கிச்சா வயசு 16 ரெடியாகி விட்டதாம். "சந்திரமுகி, "மும்பை எக்ஸ்பிரஸ்ஆகிய மெகா ஸ்டார் வேல்யூபடங்களுடன் இந்தப்படமும் தமிழ்ப் புத்தாண்டுக்குத் திரைக்கு வருகிறது.

தமிழ் திரையுலகின் கவர்ச்சி பெருமூச்சாக விளங்கி வந்த சிம்ரன், திருமணத்திற்குப் பிறகு நடித்திருக்கும் படம் என்றஎதிர்பார்ப்புடன் "கிச்சா வயசு 16 படப்பிடிப்பு தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வந்தவேளையில் திடீரென படப்பிடிப்புக்கு பிரேக் போடப்ப்ட்டது.

சிம்ரனுக்கு சம்பளப் பாக்கி, அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றெல்லாம் பல காரணங்கள் கூறப்பட்டன. கிச்சாவுக்கு கல்தாகொடுத்து விட்டு காதல் கணவருடன் லண்டன் போய் விட்டார் சிம்ரன். இதனால் படத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்த சமயத்தில் ரஜினியின் "சந்திரமுகியில் சிம்ரன் நடிக்கப் போவதாக தகவல் வெளியானதால், கிச்சா தயாரிப்பாளர் நொந்துபோனார். நம்ம படம் அவ்வளவுதான் என்ற முடிவுக்கு அவர் வந்த நிலையில்தான், சந்திரமுகியில் தான் நடிக்கவில்லை என்றுசிம்ரன் அறிவித்து, அவர் நெஞ்சில் பால் வார்த்தார்.

லண்டன் சென்றிருந்த சிம்ரன் சமீபத்தில் ஊர் திரும்பினார். வந்தவுடன் அவர் செய்து கொடுத்த முதல் வேலை கிச்சாவில் மீதமிருந்ததனது ரோலை முடித்துக் கொடுத்ததுதான். சில சில்மிஷக் காட்சிகள் அடங்கிய பகுதிகளிலும் சிம்ரன் தைரியமாக நடித்துக்கொடுத்துள்ளாராம்.

காரணம், இதுவரை எடுக்கப்பட்டிருந்த படம் அவருக்கு பெரும் திருப்தியைக் கொடுத்ததால், கவர்ச்சிக்காட்சிகளையும்,நெருக்கமான காதல் காட்சிகளையும் தாராளமாக நடித்துக் கொடுத்துள்ளாராம்.


கிட்டத்தட்ட படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து விட்டதாம். தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வெளியிட அனைத்துஏற்பாடுகளும் நடைபெற்று வருவதால் சந்திரமுகி மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் படங்களுடன் கிச்சாவும் மோதுகிறது.

ரஜினியின் சந்திமுகியில் தான் தன்னால் நடிக்கமுடியவில்லை. தான் நடித்த படமாவது ரஜினி படத்துடன் மோதட்டும் என்றுநினைத்து தான் சிம்ரன் இந்தப் படத்தில் வேகம் வேகமாக நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் கவர்ச்சியில் சிம்ரனுக்குப் போட்டியாக இன்னொரு ஹீரோயினான மீராவும் நடித்துள்ளார். இருவரதுகவர்ச்சியிலும் ரசிகர்கள் சிக்கித் திணறப் போவது நிச்சயம்.

வெயில் கொடுமையைத் தணிக்க வரும் குளுகுளு படம் கிச்சா வயசு 16!

Read more about: trisha, mother, plan, make documentary flim
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil