»   »  இன்று தொடங்கியது விஜய்யின் 'தளபதி 60' பட ஷூட்டிங்!

இன்று தொடங்கியது விஜய்யின் 'தளபதி 60' பட ஷூட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெறிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்தப் படத்துக்கு தற்காலிகமாத தளபதி 60 எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

எங்கள் வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த பிரபல நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் படம் இது.

Vijay's Thalapathy 60 starts today

அழகிய தமிழ் மகன் தந்த பரதன் இயக்கத்தில், விஜய் நடிக்கும் "தளபதி 60" படத்தின் படப்பிடிப்பு இன்று (11-04-2016) பூந்தமல்லி ஈவிபி ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் கீர்த்தி சுரேஷ்.

'கத்தி' திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் சதீஷ் இந்தப் படத்திலும் விஜய்யுடன் இணைகிறார். ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமைய்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Vijay's Thalapathy 60 starts today

இந்தப் படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜய்யுடன் கைகோர்க்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

படத்திற்கு எடிட்டிங் பிரவின் கே.எல். கலை இயக்குனர் - பிரபாகர். ஸ்டன்ட் - அனல் அரசு.

Vijay's Thalapathy 60 starts today

இன்றும் நாளையும் ஈவிபி அரங்கிலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகின்றது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.

English summary
Vijay's 60th movie tentatively titled as Thalapathy 60 has been started with pooja at EVP Studios.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil