For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தசாவதாரம் படத்திற்காக 1.5 நாள் குழம்பியிருந்த கமல், ரவிக்குமார் & கிரேசி மோகன்... தீர்த்து வைத்த வாலி

  |

  சென்னை: சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார் கமல் ஹாசன்.

  அடுத்ததாக பா.ரஞ்சித் அல்லது மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் தசாவதாரம் திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றைப் பற்றி முன்னதாக வாலி மற்றும் கிரேசி மோகன் பேசிய ஒரு நிகழ்ச்சி தற்சமயம் பகிரப்பட்டு வருகிறது.

   அனிருத்தை பாடவைக்க வேண்டும் என்று நினைத்தேன்.. முடியாமல் போனது.. இசையமைப்பாளர் எஸ்.ஆர்.ஹரி வருத்தம்! அனிருத்தை பாடவைக்க வேண்டும் என்று நினைத்தேன்.. முடியாமல் போனது.. இசையமைப்பாளர் எஸ்.ஆர்.ஹரி வருத்தம்!

  வாலி கிரேசி மோகன்

  வாலி கிரேசி மோகன்

  வழக்கமாக நகைச்சுவை படங்கள் எடுக்கும் பொழுது கிரேசி மோகனை வசனம் எழுத வைப்பார் கமல். அதுவும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் அந்தக் கூட்டணி இணையும்பொழுது இன்னும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல கவிஞர் வாலியுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்திருக்கிறார். தசாவதாரம் படத்திற்கு கிரேசி மோகன் வசனம் எழுதவில்லை என்றாலும் அந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருந்த கமல் ஹாசனுக்கு நிறைய உதவி செய்துள்ளார்.

  ஹிமேஷ் ரேஷமியா

  ஹிமேஷ் ரேஷமியா

  அந்தக் காலக்கட்டத்தில் ஆஷிக் பனாயா என்கிற பாடல் இந்தியா முழுக்க மிகப் பெரிய ஹிட்டனது. அதன் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமியாவை தசாவதாரம் படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் கமல்ஹாசன். அவர் இசையமைத்த பாடல்களும் நன்றாகவே வந்திருந்தது. இருப்பினும், அப்போது கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால் பின்னணி இசை செய்து கொடுக்காமல் படத்திலிருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.

  தேவி ஸ்ரீ பிரசாத்

  தேவி ஸ்ரீ பிரசாத்

  இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தீவிரமான கமல் ரசிகர். முன்பு ஒருமுறை கமல் ஹாசன் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று ஆசையையும் கூறியிருப்பார். அதன் அடிப்படையில் தசாவதாரம் திரைப்படத்தின் பின்னணி இசையை அமைக்கும் பொறுப்பு தேவி ஸ்ரீ பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய பின்னணி இசை குறிப்பாக ஃபிளட்ச்சர் கதாபாத்திரம் வரும் காட்சிகளுக்கு அவர் இசையமைத்தது பாராட்டப்பட்டது. அதன் பின்னர் மன்மதன் அம்பு திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை கமல் ஹாசன் ரவிக்குமார் கூட்டணி கொடுத்திருந்தார்கள்.

  ஒன்றரை நாள் குழப்பம்

  ஒன்றரை நாள் குழப்பம்

  அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த கிருச்ஷ்ணனை குறிக்கும் முகுந்தா முகுந்தா பாடலின் டியூனை ஹிமேஷ் வாலியிடம் கொடுத்துவிட்டாராம். கமல் ஹாசன், கிரேசி மோகன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய மூவரும் அந்த இசைக்கு வருவான் கண்ணன் தருவான் ஜிலேபி இப்படி எழுதுவாரா அப்படி எழுதுவாரா

  என குழம்பிக் கொண்டிருந்தார்களாம். ஆனால் கிருஷ்ணனை குறிக்கும் எந்த சொல்லும் அந்த இசைக்கு பொருந்தவில்லையாம். கிட்டத்தட்ட ஒன்றரை நாள் இப்படியே யோசித்துக் கொண்டிருந்தார்களாம்.

  குழப்பம் தீர்த்த வாலி

  குழப்பம் தீர்த்த வாலி

  மறூநாள் முகுந்தா முகுந்தா என்ற வரிகளுடன் வாலி பாடல் எழுதிக் கொடுத்தாராம். அதை பார்த்த மூவருமே பிரம்மிப்படைந்து, கிருஷ்ணனுக்கு முகுந்தா என்கிற பெயர் இருக்கிறது ஞாபகத்திற்கு வரவில்லையே என்று ஆச்சர்யப்பட்டதாக கிரேசி மோகன் வாலியிடம் கூற, அதனால்தான் நான்

  கவிஞனாக இருக்கிறேன் என்று வாலி நகைச்சுவையாக பதில்ளித்திருப்பார்.

  English summary
  Kamal Haasan is also hosting the Bigg Boss show while acting sensationally in Indian 2 directed by Shankar. Kamal is expected to act next under the direction of Pa Ranjith or Malayalam director Mahesh Narayanan. Meanwhile, an episode of Vaali and Crazy Mohan talking about an interesting incident that happened in the movie Dasavatharam is currently being shared in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X