»   »  இந்திரலோகத்தில் நா. அழகப்பன்!

இந்திரலோகத்தில் நா. அழகப்பன்!

Subscribe to Oneindia Tamil

இம்சை அரசன் 23ம் புலிகேசியைத் தொடர்ந்து வைகைப் புயல் வடிவேலு ஹீரோவாக நடிக்கவுள்ள புராணப்படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன்.

இம்சை அரசன் கொடுத்த வசூல் மழையால் குளிர்ந்து போனார் வடிவேலு. அவரது நண்பர்களும்,திரையுலகினரும் தொடர்ந்து ஹீராாேக நடியுங்கள் என்று அணத்த ஆரம்பித்தனர். ஆனால் சுதாரித்துக் கொண்டவடிவேலு, வேணாம்யா, கவுத்திப்புடாதீங்க, எனது முன்னோர்கள் பட்ட கஷ்டத்தை நான் மறக்கவில்லை என்றுகூறி வழக்கம் போல காமெடி ரோல்களில் கலக்கி வந்தார்.

ஆனால் வடிவேலுவின் நண்பரும், அவருடன் பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவருமான தம்பிராமையா விடவில்லை. அண்ணே அருமையான கதை இருக்கிறது, நடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்திகதையைச் சொல்லியுள்ளார்.

கதையைக் கேட்ட வடிவேலு குஷியாகி விட்டார். அடடே, நமக்கேத்த கதையா இருக்கேப்பு என்று கூறியவடிவேலு, இதில் நான் நடிக்கிறேன் என்று ஒத்துக் கொண்டாராம். ராமையா கூறிய கதை 1956ம் ஆண்டுவெளிவந்த பூலோக ரம்பை என்ற படத்தின் கதைதான்.

அந்தப் படத்தைத்தான் இப்போது ரீமேக் செய்யவுள்ளனர். இப்படத்தில் வடிவேலுவுக்கு நான்கு வேடங்களாம்.இந்திரன், நாரதர், எமன் மற்றும் அழகப்பன் என நான்கு வேடங்களில் அசத்தவுள்ளாராம்.

ரம்பா, ஊர்வசி, மேனகா என இந்திரலோகத்து சுந்தரி வேடங்களுக்கு நடிக்க வடக்கத்தி அழகிகளான ஷில்பாஷெட்டி, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோரை அணுகியுள்ளனர். ஷில்பா ஒத்துக் கொள்வார் எனக்கூறப்படுகிறது.

நடிகைகள் உறுதியானவுடன் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ராமையா. இப்படத்திற்காக ஆந்திரமாநிலம் கோதாவரி ஆற்றங்கரையோரம் பிரமாண்ட செட் போட்டு படம் பிடிக்கவுள்ளனராம்.

இம்சையில் 2 வேடம், இந்திரலோகத்து அழகப்பனில் 4 வேடம், அடுத்து தசாவதாரமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil