»   »  தீபாவளி திரிஷா கொண்டாட்டம்: சன்டிவியில் அரண்மனை 2, கலைஞரில் நாயகி...

தீபாவளி திரிஷா கொண்டாட்டம்: சன்டிவியில் அரண்மனை 2, கலைஞரில் நாயகி...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே அஜீத், விஜய் ரசிகர்களிடையேதான் போட்டி கடுமையாக இருக்கும் இந்த ஆண்டு திரிஷா நடித்த படங்கள் சன் டிவி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாவதால் திரிஷா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து, சாப்பிட்டு விட்டு பெரும்பாலோனோர் டிவி ரிமோட்டுடன் அமர்ந்து விடுவார்கள். டிவி ரசிகர்களுக்காகவே பண்டிகை நாளில் சிறப்புத் திரைப்படங்கள், நடிகர், நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்பி கல்லா கட்டுவார்கள்.


சன்டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி விஜய் டிவியில் புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.


சன்டிவியில் விஷால் தீபாவளி

சன்டிவியில் விஷால் தீபாவளி

சன் டிவியில் காலை 11 மணிக்கு விஷால், காத்ரின் தெரசா நடித்த கதகளி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. 6 மணிக்கு திரிஷா, சித்தார்த், ஹன்சிகா நடித்த திகில் திரைப்படம் அரண்மனை 2 ஒளிபரப்பாக உள்ளது.


ஆதித்யா சுட்டீஸ்

ஆதித்யா சுட்டீஸ்

ஆதித்யா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களை வைத்து லூட்டி அடிக்கிறார் இமான் அண்ணாச்சி... தொகுப்பாளர்கள் மழலைகளாக மாறி, இமான் அண்ணாச்சியை படுத்தும் பாடு பெரும்பாடுதான்.
கலைஞர் டிவியில் சிவகார்த்திக்கேயன்

கலைஞர் டிவியில் சிவகார்த்திக்கேயன்

கலைஞர் டிவியில் திரிஷா நடித்த நாயகி திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்புகின்றனர். மாலை 5 மணிக்கு சிவகார்த்திக்கேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ஒளிபரப்புகின்றனர்.


விஜய் டிவியில் காமெடி படங்கள்

விஜய் டிவியில் காமெடி படங்கள்

விஜய் டிவியில் தீபாவளி தினத்தன்று வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வை ராஜா வை ஆகிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. காபி வித் டிடியில் சிம்பு உடன் உரையாடுகிறார் திவ்யதர்சினி, கொடி பற்றி சிறப்பு பேட்டி தருகிறார் தனுஷ்.


English summary
Diwali Special on October 29th!. Tamil TV Channals celebrates this festival by lighting up exciting special programs and Special Movies including Aranmanai 2 and Nayagi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil