கண்ணான கண்ணே சீரியலில் இணையும் பிரபல நடிகை...சூப்பர் அப்டேட் இதோ!
சென்னை : சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியல் ரசிகர்களால் அதிகமாக விரும்பப்படும் தொடராக உள்ளது.
இந்தத் தொடரில் அடுத்தடுத்த திருப்பங்களுடன் கதை நகர்கிறது.
இந்நிலையில் இந்த தொடரை மேலும் சிறப்பாக நகர்த்த பிரபல நடிகை இதில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

சன் டிவி சீரியல்கள்
சன் டிவியின் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுபவையாக உள்ளன. குறிப்பாக ரோஜா, கண்ணான கண்ணே உள்ளிட்ட சில தொடர்கள் மிகவும் அதிகமாக விரும்பப்படும் மற்றும் டிஆர்பியில் முன்னணியில் உள்ள தொடர்களாக காணப்படுகின்றன. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களை ஆண், பெண் பேதமின்றி அனைத்து தரப்பினரும் ரசித்து வருகின்றனர்.

சீரியல்களில் நடிக்கும் நடிகைகள்
சினிமாவில் முன்னணியில் இருந்த பல நடிகைகள் சின்னத்திரையில் தற்போது பேதமின்றி நடித்து வருகின்றனர். அந்த வகையில் தேவயானி, ராதிகா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகின்றனர்.

கண்ணான கண்ணே தொடர்
அந்த வகையில் சன் டிவியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் கண்ணான கண்ணே தொடரில் பிரபல நடிகை இனியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மலையாளம் மற்றும் தமிழில் தொடர்ந்து நடித்து வருகிறார். கண்ணான கண்ணே தொடரில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரசவத்தின்போது இறந்து விடுவதாக இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

விறுவிறுப்பான தொடர்
கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த தொடர் சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. பிரித்வி, நிமேஷிகா, ராகுல் ரவி, லிவிங்ஸ்டன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இந்த தொடரில் பெரும் பணக்காரராக இருந்த அவர், தன்னுடைய மகளுக்காக ஏழையாக மாறுவதாக தொடர் சென்று கொண்டுள்ளது.

தொடரில் பங்கேற்கும் இனியா
தன்னுடைய முதல் மனைவியின் இறப்பிற்கு காரணமான மகளை அவர் வெறுத்து ஒதுக்குவதாக இந்த தொடரின் கதைக்களம் செல்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் பிளாஷ்பேக் காட்சிகளில் இனியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு மற்றும் ஒளிபரப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











