ரஞ்சித் மறுமணத்தால் எனக்கு கவலையில்லை... சொல்கிறார் பிரியாராமன்

By Mayura Akilan

சென்னை: நடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம் செய்வது பற்றி எனக்கு கவலை இல்லை என்று அவரது முதல்மனைவி பிரியாராமன் கூறியுள்ளார்.

பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி' உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். ‘பீஸ்மர்' என்ற படத்தை இவர் டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்தார்.

வள்ளி படத்தில் அறிமுகமானவர் பிரியா ராமன், சூரியவம்சம், சின்னராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரும், ரஞ்சித்தும் இணைந்து ‘நேசம் புதுசு' என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள்.

அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (வயது 7), ஆகாஷ் (3) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

ரஞ்சித்துக்கும், பிரியா ராமனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இரண்டு பேரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, தாம்பரத்தில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு செய்தார்கள். கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பு கூறப்பட்டது.

நல்ல நண்பர்

நல்ல நண்பர்

விவாகரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும், நாங்கள் இருவரும் கணவன்-மனைவி உறவில் இருந்து விடுபட்டாலும், நல்ல நண்பர்களாக இருப்போம். சிறந்த தோழன்- தோழியாக வாழ்ந்துகாட்டுவோம் என்றனர். குழந்தைகள் இருவரும் பிரியா ராமனிடம் வசிக்கின்றனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்த நிலையில் நடிகை ராகசுதாவை 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக ரஞ்சித் அறிவித்து உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியாராமன், அதுபற்றி எனக்கு கவலை இல்லை என்றார்.

ஆண் துணை தேவையில்லை

ஆண் துணை தேவையில்லை

மேலும் அவர், எனக்கு தன்னம்பிக்கை நிறைய இருக்கிறது. சொந்த காலில் என்னால் நிற்க முடியும். ஆண் துணை எனக்கு தேவை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறினார்.

எது நடக்குமோ அது நடக்கும்

எது நடக்குமோ அது நடக்கும்

எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுடன் யார் தயவுமின்றி வாழ்ந்து காட்டுவேன். யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவர்களுடைய விருப்பம். நான் பகவான் கிருஷ்ணரின் பக்தை. அவர் வழி காட்டுதல்படி நடப்பேன். எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் என்று கூறியுள்ளார் பிரியாராமன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X