»   »  ரஜினி படத்துக்கு அடுத்து கமல் படம்... அறிவித்தது லைகா!

ரஜினி படத்துக்கு அடுத்து கமல் படம்... அறிவித்தது லைகா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறது லைகா நிறுவனம். இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி' படம் மூலமாக தமிழ் சினிமாவில் கால்பதித்த ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்து வருகிறது.

ரூ 1000 கோடி

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரூ 1000 கோடிகளை இந்த நிறுவனம் முதலீடு செய்கிறது.

ரஜினி படம்

தற்போது ரஜினி நடிப்பில் ‘2.ஓ' படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 350 கோடி.

ஒரே நேரத்தில்

அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தையும் தயாரித்து வருகிறது. தெலுங்கு, இந்தியிலும் புதிய படங்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

கமலுடன்

அடுத்து கமல் நடிக்கவிருக்கும் புதிய படத்தையும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமல் தற்போது அமலாவுடன் சேர்ந்து ‘அப்பா அம்மா விளையாட்டு' மற்றும் மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

எந்தப் படம்?

கமல் நடிக்கும் இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தை ‘லைக்கா' நிறுவனம் தயாரிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு படத்தை தயாரிக்கிறதா? என்பது இன்னும் முடிவாகவில்லை.

மருதநாயகம்

கமலின் கனவு படமான ‘மருதநாயகம்' நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. ஒருவேளை இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் உதவியுடன் கமல் மறுபடியும் தூசு தட்டி எடுக்கப் போகிறாரா? - விரைவில் விவரம் சொல்வதாக அறிவித்துள்ளது லைகா.

English summary
Lyca Production has officially announced their next biggie with Kamal Hassan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos