twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'லிங்கா' விவகாரம்... ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனுவில் முரண்பாடு

    |

    மதுரை: லிங்கா திரைப்படத்தின் கதை தொடர்பான வழக்கில் ரஜினி மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பதில் மனுவில் முரண்பாடு உள்ளதாக முல்லைவனம் 999 பட இயக்குநர் ரவிரத்தினம் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் லிங்கா. இப்படம் வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாளன்று ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், இப்படம் தனது முல்லைவனம் 999 படத்தின் கதை என்றும், அதைத் திருடி லிங்கா படத்தைத் தயாரித்துள்ளனர் என்றும் மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த கே.ஆர்.ரவிரத்தினம் என்பவர் ஹைகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

    பென்னிகுக் வரலாறு...

    பென்னிகுக் வரலாறு...

    அந்த மனுவில், ‘பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் வரலாற்றை பின்னணியாகக் கொண்டு ‘முல்லைவனம் 999 என்ற படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படத்தின் கதையை கடந்த 24.2.2013ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். 2014, பிப். 24ல் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் படத்தின் பூஜை நடந்தது.

    கதை திருட்டு...

    கதை திருட்டு...

    யூ டியூப்பில் இருந்த எனது கதை ‘லிங்கா' என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. சமூக வலைதளமான யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட எனது கதையை திருடியது சட்டப்படி குற்றம். எனவே, ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்,'' எனத் தெரிவித்திருந்தார்.

    பதில் மனு...

    பதில் மனு...

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்.குமரன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

    குற்றச்சாட்டுக்கு மறுப்பு...

    குற்றச்சாட்டுக்கு மறுப்பு...

    அதில், ரஜினி தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘‘மனுதாரர் உள்நோக்கத்துடன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். நான் லிங்கா படத்திற்கு விநியோகஸ்தர் என்பது தவறு.

    புகழுக்கு களங்கம்...

    புகழுக்கு களங்கம்...

    இந்த படத்தில் நான் நடிகன் மட்டுமே. எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சி இது. தற்போது லிங்கா படப்பிடிப்பு முடிந்து விட்டது. முல்லைவனம் 999 படத்தின் இயக்குனரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டதும் எனக்கு தெரியாது.

    கிங்கான்...

    கிங்கான்...

    மனுதாரரின் குற்றச்சாட்டு அடிப்படையில்லாதது. லிங்கா படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியது பொன்.குமரன். அவரது கதையை கிங்கான் என்ற பெயரில் 2010ம் ஆண்டிலேயே பதிவு செய்து உள்ளார்.

    மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்...

    மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்...

    எனவே கதையை திருடியதாக கூறுவதை ஆட்சேபிக்கிறேன். இந்த சர்ச்சையில் தேவையில்லாமல் என்னை சேர்த்துள்ளனர். எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்,'' என கூறியிருந்தார்.

    கூடுதல் பிரமாணப் பத்திரம்...

    கூடுதல் பிரமாணப் பத்திரம்...

    இந்நிலையில், ரஜினியின் குற்றச் சாட்டுக்கு பதிலளித்து மனுதாரர் ரவிரத்தினம் கூடுதல் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    முரண்பாடு...

    முரண்பாடு...

    அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘படத்தின் கதை, திரைக்கதையை பொன்.குமரன் எழுதியதாக ரஜினி கூறியுள்ளார். ஆனால், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கதையை பொன்.குமரன் எழுதியதாகவும், திரைக்கதையை தான் எழுதியதாகவும் கூறியுள்ளார். இருவரின் பதிலில் முரண்பாடு உள்ளது.

    லிங்கா வேறு... கிங்கான் வேறு

    லிங்கா வேறு... கிங்கான் வேறு

    ரஜினி மகளுக்கு சொந்தமான நிறுவனம்தான் லிங்கா படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது. பொன். குமரன் 2010ல் கிங்கான் என்ற பெயரில் பதிவு செய்திருந்த படம் 2011ல் வெளியாகிவிட்டது. கிங்கான் கதையும், லிங்காவின் கதையும் வேறுபட்டவை.

    நீதி வேண்டும்...

    நீதி வேண்டும்...

    ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் மனுவை தாக்கல் செய்யவில்லை. நான் சினிமாவில் முதல் முறையாக நுழைந்துள்ளேன். நடிகர் ரஜினி மற்றும் லிங்கா படக்குழுவினர் செல்வாக்கு மிக்கவர்கள். எனது இந்த மனுவை ஏற்று எனக்கு நீதி வழங்க வேண்டும்,'' எனத் தெரிவித்துள்ளார்.

    நாளை விசாரணை...

    நாளை விசாரணை...

    ஏற்கனவே இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தனர். எனவே நாளை இந்த வழக்கு விசாரணை நடைபெறும்.

    English summary
    The controversy over Rajinikanth’s forthcoming film Lingaa took a stunning turn on Wednesday with the actor stating that both the script and screenplay for the movie had been penned by Chennai-based writer S. Ponkumaran. This runs contrary to the claim made by the film’s director K.S. Ravikumar on Tuesday that it was he who wrote the screenplay for the basic storyline of Mr. Ponkumaran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X