கங்காரு படம் + பாட்டு சக்சஸ்... ஸ்ரீநிவாஸ் ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை: கங்காரு படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார் பிரபல பிண்ணனிப் பாடகர் ஸ்ரீநிவாஸ்.

படையப்பா படத்தில் இடம்பெற்ற ‘மின்சாரக்கண்ணா' உள்ளிட்ட பல்வேறு பாடல்களைப் பாடியவர் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ். இவர் முதன்முறையாக கங்காரு படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், கங்காரு படத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பால் ஸ்ரீநிவாஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது மகிழ்ச்சி குறித்து அவர் கூறியிருப்பதாவது :-

2000 பாடல்கள்...

2000 பாடல்கள்...

நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 2000 பாடல்கள் பாடியிருக்கிறேன். எனக்கு இசைமீது தனியாத தாகம் உண்டு. ஆர்வமுண்டு. நம்பிக்கை உண்டு. ஆனால் இசையமைப்பதைத் தேடிப் பயணப் படவில்லை.

ஒரு பாடலுக்கு மட்டும்...

ஒரு பாடலுக்கு மட்டும்...

காரணம் பாடகராகவே நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அப்படியும் வஸந்த் சார் இயக்கத்தில் 'ஏய்நீ ரொம்ப அழகா இருக்கே' படத்தில்​ ​ஒரு பாடலுக்கு இசையமைத்தேன்.

இனி நானும் நானில்லை...

இனி நானும் நானில்லை...

'இனி நானும் நானில்லை' என்கிற அந்தப்​ ​பாடலும் ஹிட்தான். மீண்டும் இசை அமைக்க நேரமில்லை. இந்நிலையில் நண்பர் மூலம் சாமி வந்தார்.

நேர்மையான கதை...

நேர்மையான கதை...

கதை கேட்டேன். ரொம்பவும் நேர்மையாக இருந்தது. பாடல் உருவானது பாடல்பிடித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சம்மதித்தது அவரது ரசனையின் மதிப்பைக் காட்டியது.

என் பாக்கியம்...

என் பாக்கியம்...

வைரமுத்து சாரின் வரிகளைப் பாடியிருக்கிறேன். அவர் வரிகளுக்கு இசையமைப்பேனா என்று கனவு கூட கண்டதில்லை. அப்படி நடந்தது என்பாக்கியம் .அவர் பாடல்கள் படத்துக்குப் பெரிய பலம்.

இருவேறு அனுபவங்கள்...

இருவேறு அனுபவங்கள்...

படத்தில் 5பாடல்கள் . அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து​ ​2 பாடல்களும் மெட்டுக்கு எழுதி 3 பாடல்களும் என்று இசையமைப்பில் இருவேறு அனுபவங்களும் கிடைத்தன. பாடல்கள் பெரியவெற்றி. ஐடியூன்களில் நம்பர் ஒன் ஆனது.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

காதல், பாசம், தத்துவம் என எல்லாவகை பாடல்களும் உள்ளன. பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து படமும்​ ​வெற்றி பெற்றிருப்பதால் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்..''எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X