திட்டமிட்டபடி ரஜினி பிறந்த நாளில் வெளியாகுமா லிங்கா?
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களில் நடிக்கும் லிங்கா திரைப்படம், திட்டமிட்டபடி அவரது பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மே மாதம் தொடங்கியது லிங்கா படப்பிடிப்பு. தொடர்ந்து இடைவிடாமல் நடந்த படப்பிடிப்பு கடந்த மாதம் முடிந்தது.
ஆனால் ரஜினி தோன்றும் ஆரம்பப் பாடல் காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் அந்த பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுவிடும்.

டிசம்பர் 12
வரும் நவம்பர் 16-ம் தேதி இசை வெளியீட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியாவது ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளரும் இயக்குநரும் குறியாக உள்ளனர்.

ஒரு வாரம் போட்டியில்லை
அப்படி வெளியானால், அந்தத் தேதியில் வேறு எந்தப் படமும் போட்டிக்கு வராது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரை வேறு படங்களும் இல்லை. இந்தியில் ஆமீர்கான் நடித்த பிகே படம் கூட ஒருவாரம் கழித்தே உலகமெங்கும் வெளியாகிறது.

சென்சார்
அதிக அரங்குகளில் வெளியாகவிருக்கும் லிங்கா, முதல் வாரத்தில் போதுமான வசூலைக் குவிக்க இந்த ஒருவார இடைவெளி போதுமானதாகும்.
நவம்பர் 30-ம் தேதி படத்தை சென்சாருக்கு அனுப்புவதில் குறியாக இருக்கிறார் ரவிக்குமார்.

வேக வேகமாக
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், கிராபிக்ஸ் வேலைகள் அனைத்துமே இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே டிசம்பர் 12-ம் தேதி படம் வெளியாவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

பின்னணி இசைதான் பிரச்சினை
பின்னணி இசைச் சேர்ப்பு மட்டும் கொஞ்சம் தாமதமாகும் சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி தாமதமானால் கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் தினத்தில் வெளியிடலாமா என்ற மாற்று ஏற்பாட்டிலும் தயாரிப்பாளர் தீவிரமாக உள்ளாராம்.

ரஜினி பிறந்த நாளில்
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பிறந்த நாளில் வெளியாகும் படம் லிங்காதான். எனவே ரவிக்குமார் வேகத்துக்கு ஈடுகொடுத்து ரஹ்மானும் முடித்துத் தருவார் என்பது தயாரிப்பாளரின் எதிர்ப்பார்ப்பு.


Click it and Unblock the Notifications











