» 

ஸ்பெஷல்ஸ்

பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மிக அமைதியாக நடித்த விஜயலட்சுமி சூரி படத்தில் படு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

பார்க்க மிக அட்டகாசமாக இருந்தாலும் தமிழச்சியாக இருந்தாலும் கூட தமிழில் அவருக்கு உரிய வாய்ப்புக்கள் கிடைக்காததால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். கன்னடத்தில் மூன்றாம் தர ஹீரோக்களுடன் சில படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் இளம் ஹீரோக்கள் ஒதுக்கியதால் சத்யராஜ், பிரபு, பார்த்திபன் ஆகியோருடன் தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

கன்னட ஹீரோக்களுக்கு இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்பதால் அவர்களுடன் அவ்வப்போது ஜோடியாக நடித்து வருகிறார்.

இந் நிலையில் சூரி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.

இதில் உமா- விக்னேஷ் தான் மெயின் ஜோடி. இதில் விஜயலட்சுமிக்கு விலைமாது வேடம் கொடுத்துள்ளார்கள்.

கொஞ்சம் கவர்ச்சி காட்ட வேண்டுமே என்று இயக்குனர் கேட்க, அள்ளிக் கொட்டி வருகிறாராம்.

இந்த மாதிரி சான்ஸாவது தமிழில் இனி தொடந்து கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்ட விஜயலட்சுமி ஒரு பாடல் காட்சியில் அல்போன்ஸா ரேஞ்சுக்கு கவர்ச்சியாட்டம் போட்டுத் தள்ளிவிட்டாராம்.

இதனால் விஜயலட்சுமிக்கு இன்னொரு பாட்டும் வைத்துவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறதாம் சூரி பட யூனிட்.

Read more about: ankita, ar rahman, baba, bhoomika, boomika, cinema, dhool ankitha, directors, iilayaraja, kavya madhavan, krrala, movies, music, singers, songs, vikram
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos