முன்ஜென்மத் தொடர் காஞ்சனா!

பெண்ணுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் இரண்டு இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகும் பெண் என தொடரின் ஆரம்பமே அமர்க்களமாய் இருக்கிறது. சில நூற்றாண்டுகள் கழித்து கதை தொடர்கிறது. அமெரிக்காவில் இருந்து தன்னுடைய வம்சாவழியைத் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் காஞ்சனாவிற்கு காஞ்சிபுரத்தில் இருந்தே மர்மங்கள் தொடங்குகின்றன.
கிராமத்திற்கு தனது தாத்தா-பாட்டியை பார்க்க வருகிறாள், காஞ்சனா. முதன் முதலாக அந்த கிராமத்திற்கு அவள் வந்தாலும், பல நாள் அவளிடம் பழகியது போல் அங்குள்ள மக்கள் அவளிடம் பேசி பழகுகின்றனர். ஆனால் அவளை பார்த்த தாத்தா-பாட்டியோ பயப்படுகிறார்கள். தாத்தா - பாட்டி பயந்தது போலவே அடுத்து நடக்கும் பல சம்பவங்கள் அவளை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. அவள் யார்? அவளைப் பார்த்தும் ஊரே மகிழ்ச்சி முகம் காட்ட, அவள் வருகையில் அவள் தாத்தா-பாட்டி மட்டும் எதற்காக பயப்பட வேண்டும்?
சஸ்பென்சான இந்த தொடரை இயக்குபவர் சரவணன்-மீனாட்சி தொடரின் இயக்குனர் அழகர். காஞ்சனா தொடரில் வித்தியாசமான பாத்திரத்தில் குயிலி நடித்திருக்கிறார். விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு காஞ்சனா தொடர் ஒளிபரப்பாகிறது


Click it and Unblock the Notifications











