தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட் நிர்வாகிகள் கைது!- வீடியோ
சென்னை : தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. படப்பிடிப்புகளுக்கான செலவுகள், ப்ரொமோஷன் செலவுகள், அரசுக்கு செலுத்தவேண்டிய வரி, ஒளிபரப்புக் கட்டணம் என பொருளாதார ரீதியாக நிறைய சிக்கல்களைச் சந்திக்கவேண்டி இருக்கிறது.
இதைவிட தயாரிப்பாளர்களுக்கும் மற்ற திரையுலகினருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி இணையதளங்கள் தான். புதுப்படம் எது ரிலீஸ் ஆனாலும் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலும் ரிலீஸ் ஆகிவிடும்.
தமிழ் ராக்கர்ஸ் பற்றி 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' படங்களின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பெரிய இடத்தில் உள்ளது. அவர்களை மிரட்டும் அளவிற்கு நம்மால் எதுவும் செய்யமுடியாது.
கடுமையான உழைப்பு மற்றும் பெரும் பொருட்செலவில் தான் படங்களை எடுக்கிறோம். ஆனால் இவர்கள் எளிதில் வெளியிடுகிறார்கள், தமிழ் ராக்கர்ஸ் மனதுவைத்தால் தான் சினிமா துறையில் உள்ளவர்கள் அனைவரும் வாழ முடியும்." எனக் கூறியிருக்கிறார்.
அவர் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களை அவ்வப்போது கைது செய்தாலும் அதன்பிறகும், படங்கள் வெளியிடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் ராக்கர்ஸே மனது வைத்தால் தான் இதற்கு தீர்வு உண்டாகும்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.