»   »  63-வது தேசிய திரைப்பட விருதுகள்: முதல் தேசிய விருதைப் பெற்றார் சமுத்திரக்கனி.. விசாரணைக்காக!

63-வது தேசிய திரைப்பட விருதுகள்: முதல் தேசிய விருதைப் பெற்றார் சமுத்திரக்கனி.. விசாரணைக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 63 வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

2015 ம் ஆண்டுக்கான 63 வது தேசிய விருதுகள் கடந்த மார்ச் 28 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகராக அமிதாப் பச்சனும், சிறந்த நடிகையாக கங்கனா ரனாவத்தும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழில் சிறந்த படமாக விசாரணை தேர்வு செய்யப்பட்டது. சிறந்த துணை நடிகராக சமுத்திரக்கனியும், சிறந்த படத்தொகுப்பாளராக மறைந்த கிஷோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

63 வது தேசிய விருதுகள்

63 வது தேசிய விருதுகள்

2015 ம் ஆண்டிற்கான 63 வது தேசிய விருதுகள் கடந்த மார்ச் 28 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகராக அமிதாப் பச்சனும், சிறந்த நடிகையாக கங்கனா ரனாவத்தும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த இயக்குநராக பாஜிராவ் மஸ்தானி படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தேர்வு செய்யப்பட்டார்.

அமிதாப் பச்சன், கங்கனா ரனாவத்

அமிதாப் பச்சன், கங்கனா ரனாவத்

இந்நிலையில் 63 வது தேசிய விருதுகளை நேற்று விஞ்ஞான் பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.சிறந்த நடிகர் விருதை அமிதாப்பச்சனுக்கும், சிறந்த நடிகை விருதை கங்கனா ரணாவத்துக்கும் பிரணாப் முகர்ஜி வழங்கினார். சிறந்த இயக்குனர் விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கு 'பாஜிராவ் மஸ்தானி' படத்துக்காக வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகர் மனோஜ் குமாருக்கு 'தாதா பால்சாகேப்' விருது வழங்கப்பட்டது.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பாளர் ஆகிய 3 பிரிவுகளுக்கான தேசிய விருது வெற்றிமாறனின் விசாரணைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிறந்த துணை நடிகர் விருதை சமுத்திரக்கனியும்,சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை கிஷோருக்கு பதிலாக அவரது தந்தை தியாகராஜனும் பெற்றுக்கொண்டனர்.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி படத்திற்கான தேசிய விருதை அப்படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பெற்றுக் கொண்டார். சிறந்த படம், சிறந்த விஎப்எக்ஸ்(VFX) என 2 பிரிவுகளில் பாகுபலி தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

English summary
63rd National Awards: Actor Samuthirakani Receives his First National Award for Best Supporting Actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil