Just In
- 10 min ago
சேலை கிழிஞ்சு போச்சு.. கையில் கத்திரிக்கோல்.. பயங்கர கோலத்தில் பவித்ரா லட்சுமி
- 17 min ago
கோல்டன் குளோப் விருதுகள் 2021: சிறந்த படத்திற்னகான விருதை தட்டிச் சென்றது 'நோமட்லேன்ட்'!
- 35 min ago
2021 ல் தமிழில் ரீமேக் ஆகும் 5 ஹிட் படங்கள்...ரசிகர்கள் ஏற்பார்களா
- 1 hr ago
மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டோ ஷுட் நடத்திய விஜய் சேதுபதி.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- News
"கணக்கு" பார்த்து.. கரெக்ட்டாக காய் நகர்த்தும் எடப்பாடியார்.. விழிக்கும் பாஜக.. திகைக்கும் தேமுதிக!
- Finance
900 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. நிஃப்டியும் 14,700 மேல் ஏற்றம் தான்.. என்ன காரணம்?
- Lifestyle
ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா?
- Sports
4வது டெஸ்ட்... தீவிரமா பயிற்சி எடுக்கும் இந்திய அணி... டிரா அல்லது வென்றாக வேண்டிய கட்டாயம்!
- Automobiles
பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு வாகனமே தேவே.. இது பெட்ரோலால் மட்டுமல்ல பேட்டரியிலும் ஓடும்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோலாகலமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழா.. சிறந்த படத்திற்கான விருதை தட்டி தூக்கியது 1917!
கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவில் கோல்டன் குளோப் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது.
77-வது கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவில் நடைபெற்றது. ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஹாலிவுட் நடிகை நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர். விருது விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கணவருடன் பங்கேற்பு
இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்றார். பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் மாடர்ன் கவுனில் ஒய்யாரமாக பங்கேற்றார் பிரியங்கா சோப்ரா.

சிறந்த படம்
இதில் கடந்த ஆண்டு வெளியான 1917 என்ற படம் சிறந்த படம் சிறந்த படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. மேலும் சிறந்த இயக்குநருக்கான விருதையும் இந்தப்படமே பெற்றது.

சிறந்த நடிகர்
ஜூடி படத்திற்காக ரீனி ஸெல்வஜர் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றார். ஜோக்கர் என்ற படத்திற்காக ஜாக்குயின் ஃபோனிக்ஸ் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றது.

சிறந்த திரைக்கதை
மேலும் ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் ஹாலிவுட் என்ற படம் சிறந்த காமெடி மற்றும் இசைக்கான விருதை தட்டிச்சென்றது. சிறந்த திரைக்கதைக்கான விருதை குயென்டின் டரன்டினோ என்ற படம் பெற்றது.

ஆஸ்திரேலியா தீ
ரஸ்ஸல் குரோவுக்கு சிறந்த நடிப்புக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த விருதை பெற வரவில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பது தொடர்பான மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தால் அவர் விருது விழாவில் பங்கேற்கவில்லை.

சிறந்த துணை நடிகை
நடிகை ஒலிவியா கோல்மேன் தி கிரவுன் என்ற சீரியலுக்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். லாரா டெர்ன் மேரேஜ் ஸ்டோரி என்ற சீரியலுக்கான சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார்.

நகைச்சுவை சீரியல்
சக்ஸஷன் என்ற டிவி சீரியலுக்கு சிறந்த டிவி சீரியலுக்கான விருது வழங்கப்பட்டது. ஃபோபி வாலர்-பிரிட்ஜ் ஃப்ளீபேக் என்ற சீரியலுக்காக ஒரு பெரிய நடிப்பு விருதைப் பெற்றார். இந்த சீரியல் சிறந்த நகைச்சுவை சீரியலுக்கான விருதையும் பெற்றது.

சிறந்த அனிமேஷன் படம்
செர்னோபில் என்ற தொலைக்காட்சி தொடர் சிறந்த வரையறுக்கப்பட்ட தொடர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான கோல்டன் குளோப் விருதை ஃப்ரோஸன் 2, தி ஹிட்டன் வோர்ல்டு, தி லயன் கிங், மிஸ்ஸிங் லிங்க், டாய் ஸ்டோரி 4 ஆகிய படங்கள் பெற்றனர்.