»   »  பாகிஸ்தானின் 'கவுரவக் கொலைகளை' ஒரு குறும்படத்தால் மாற்றியமைக்க முடியுமா?

பாகிஸ்தானின் 'கவுரவக் கொலைகளை' ஒரு குறும்படத்தால் மாற்றியமைக்க முடியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் ஷர்மீன் ஒபிட்- சினாய்(37) என்ற பாகிஸ்தானிய- கனடப் பெண் இயக்கிய 'எ கேர்ள் இன் தி ரிவர்' சிறந்த குறும்படம் - டாக்குமென்டரி பிரிவில் விருதை வென்றுள்ளது.

கவுரவக் கொலைகள் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் 1௦௦௦ க்கும் மேற்பட்ட பெண்கள் பாகிஸ்தான் நாட்டில், தங்கள் பெற்றோரால் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

A Girl in the River: The Price of Forgiveness Bags Oscar Award

இந்நிலையில் இந்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட 'எ கேர்ள் இன் தி ரிவர்' ஆவணப்படம் தற்போது ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.

எ கேர்ள் இன் தி ரிவர்

பாகிஸ்தானின் கவுரவக் கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் எ கேர்ள் இன் தி ரிவர். சுமார் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தை பாகிஸ்தான்- கனடப் பெண் இயக்குநர் ஷர்மீன் ஒபிட்- சினாய்(37) இயக்கியுள்ளார்.

கவுரவக் கொலைகள்

கவுரவக் கொலைகள் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1௦௦௦ க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோரால் பாகிஸ்தான் நாட்டில் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதனை கருவாகக் கொண்டு உருவான படமே 'எ கேர்ள் இன் தி ரிவர்'. தனது தந்தை மற்றும் மாமாவின் கவுரவக் கொலை முயற்சியில் இருந்து தப்பிக்கும் 18 வயதுப் பெண்ணைப் பற்றிய கதையே இப்படத்தின் கரு. கொலைகார்களை மன்னிப்பதன் மூலம் அவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்து விடுகின்றனர் என்பதை இப்படம் எடுத்துக் கூறுகிறது.

சட்டத் திட்டங்களை

சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், பாகிஸ்தானின் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும் பாகிஸ்தானின் மூத்த மந்திரிகளும், ராஜதந்திரிகளும் இந்தப் படம் பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானின் முதல்

பாகிஸ்தானில் இருந்து முதன்முதலாக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றவர் என்ற பெருமை தற்போது ஷர்மீனுக்குக் கிடைத்துள்ளது. முன்னதாக சேவிங் பேஸ்(2012) ஆவணப் படத்திற்காக ஆஸ்கர் விருதை ஷர்மீன் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஷர்மீன் ஒபிட்- சினாய்

இந்தப் படத்தை இயக்கிய ஷர்மீன் ஒபிட்- சினாய் பாகிஸ்தான், கனடா என்று 2 நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்கிறார்.கடந்த 2004 ம் ஆண்டிலிருந்து
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் வசித்து வருகிறார். இயக்குநர் மற்றும் பத்திரிகையாளர் என்ற இரட்டைக் குதிரையில் சவாரி செய்துவரும் ஷர்மீன் எம்மி உட்பட பல்வேறு விருதுகளை தனது படங்களுக்காக வாங்கிக் குவித்திருக்கிறார்.

இனியாவது பாகிஸ்தானின் கவுரவக் கொலைகள் குறையுமா?

English summary
Pakistani-Canadian Filmmaker Sharmeen Obaid-Chinoy's 'A Girl in the River: The Price of Forgiveness' Bags Best Documentary Short in Oscar 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil