»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மற்றும் ஷெனாய்க் கலைஞர் பிஸ்மில்லாகானுக்கு பாரத ரத்னா விருதும், இந்திநடிகர் அமிதாப்பச்சனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.

கலை முதல் அணு ஆயுதத்துறை வரை பல துறைகளில் சாதனை படைத்த 55 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குபாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

வியாழக்கிழமை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருதுகளை வழங்கி கெளரவித்தார். துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்த், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, விமானப்படை மற்றும் ராணுவ மூத்த அதிகாரிகள் விருதுவழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

என்ன சொல்கிறார் கோன் பனேகா க்ரோர்பதி அமிதாப்பச்சன்?

பத்மபூஷன் விருது பெற்ற அமிதாப்பச்சன் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசு எனக்கு பத்மபூஷன் விருதுவழங்கி கெளரவித்திருக்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஏற்கனவே எனக்கு பத்மஸ்ரீவிருது கிடைத்துள்ளது.

எங்கள் வீட்டில், இரண்டு பேர் ஏற்கனவே பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றுள்ளது என்னை மிகவும்பெருமைப்பட வைக்கிறது. என் தந்தை ஹரிவன்சாரி பச்சன் மற்றும் என் மனைவி ஜெயா ஆகியோர் பத்மபூஷன்விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ளனர்.

அரசால் கொடுக்கப்படும் எந்த விருதும் பெருமைக்குரியதுதான் என்று கூறும் அமிதாப்பச்சன் தற்போது கோன்பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சி மூலம் டெலிவிஷனில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பத்மபூஷன் விருது வாங்குவதற்காக, நிகழ்ச்சி நடந்த அசோக் ஹாலுக்குள் அமிதாப்பச்சன் நுழைந்ததுமே அங்குபெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அமிதாப்பச்சனின் ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு அவருக்குஅன்புத்தொல்லை கொடுத்தனர். இதில் உடன் விருது வாங்க வந்தவர்களும் அடக்கம்.

விருது வாங்க 55 பேர் வந்திருந்த போதிலும் அமிதாப்பச்சன் தான் சென்டர் ஆப் அட்ராக்ஷனாகத் திகழ்ந்தார்.

இயக்குநருக்கு பத்மவிபூஷன்:

இந்தித்திரைப்பட இயக்குநர் ஹிருஷிகேஷ் முகர்ஜி பத்ம விபூஷன் விருதைப் பெற்றார். திரைப்படத் தயாரிப்பாளர்பி.ஆர்.சோப்ரா மற்றும் எவர்கிரீன் ஹீரோவாகக் கருதப்படும் தேவ் ஆனந்த் ஆகியோர் பத்மபூஷன் விருதைப்பெற்றனர். மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

மேலும் விருது பெற்றவர்கள் குறித்த விவரம்:

பத்ம விபூஷன்:

இசையமைப்பாளர் சிவக்குமார் சர்மா

பத்ம பூஷன்:

நாட்டியக் கலைஞர்: யாமினி கிருஷ்ணமூர்த்தி

வயலின் இசைக் கலைஞர்: சுப்ரமணியம்

மற்றும் பலர்.

பத்மஸ்ரீ:

ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்: புவனேஸ்வரி குமாரி

ஹாக்கி விளையாட்டு வீரர்: தன்ராஜ் பிள்ளை

மருத்துவ வல்லுநர்: கே.ஏ.ரெட்டி

பத்திரிக்கையாளர்: காலித் அப்துல் ஹமீது அன்சாரி

டென்னிஸ் விளையாட்டு வீரர்கள்: லியாண்டர் பயாஸ் மற்றும் மகேஷ் பூபதி.

தவிர்க்க முஐயாத காரணங்களால் பிஸ்மில்லாகானால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை.

ஐ.ஏ.என்.எஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil