»   »  ஆட்டோகிராப், சித்ரா, பா.விஜய்க்கு விருது

ஆட்டோகிராப், சித்ரா, பா.விஜய்க்கு விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருது ஆட்டோகிராப் திரைப் படத்திற்கு அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் சார்பில் 2004ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடந்தது.ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த விருதுகளை வழங்கினார்.

ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடிய சித்ரா சிறந்த பின்னணி பாடகிக்கானவிருதைப் பெற்றார்.


ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை எழுதிய பா.விஜய் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார்.

சிறந்த நடன இயக்குனருக்கான விருதை பிரபுதேவா பெற்றார்.

மதுர் பண்டார்கரின் பேஜ் 3 படத்துக்கு சிறந்த படத்துக்கான தங்கத் தாமரை விருது வழங்கப்பட்டது.


சிறந்த பொழுதுபோக்குப் படத்திற்கான விருது சேரனின் ஆட்டோகிராப் படத்திற்கும், யாஷ் சோப்ராவின் வீர் ஜாராஎன்ற இந்திப் படத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

பிராந்திய மொழிப் படங்களில் தமிழில் நவரசா என்ற படத்துக்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனருக்கான விருதை வங்காளப்பட இயக்குனர் புத்ததேவ் தாஸ்குப்தா பெற்றார்.


சிறந்த நடிகருக்கான விருது பிரபல இந்தி நடிகர் சைப் அலிகானுக்கும், ஹசீனா என்ற கன்னடப் படத்தில் சிறப்பாகநடித்த நடிகை தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

உதித் நாராயண் சிறந்த பின்னணி பாடகர் விருதையும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வித்யாசாகரும்(சுவதாபி என்ற தெலுங்குப் படத்துக்காக) பெற்றனர்.

சினிமா துறைக்கு ஆற்றிய சேவைக்காக மலையாள பட இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணனுக்கு 2004ம்ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருதை கலாம் வழங்கினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil