twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்நியன், ஐயாவுக்கு விருதுகள்!

    By Staff
    |

    தமிழ் சினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் வழங்கப்படவுள்ள 2005ம் ஆண்டுக்கானவிருதுகளில் பெரும்பாலானவற்றை அந்நியனும், ஐயாவும் அள்ளியுள்ளன.

    தமிழ் திரை ரசிகர்கள் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்குரியவிருதுகள் அளிக்கப்படுகின்றன. 2005ம் ஆண்டுக்கான விருதுகள் தற்போதுஅறிவிக்கப்பட்டுள்ளன.

    செப்டம்பர் 16ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுகள்வழங்கப்படும். விருதுக்கான தேர்வு மன்றத்தின் தலைவரான முன்னாள் உயர்நீதிமன்றநீதிபதி ஜெகதீசன் தலைமையில் நடந்தது.

    விருது பெற்ற கலைஞர்கள் விவரம்:

    சிறந்த திரைப்படம்: அந்நியன்.

    பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படம்: சந்திரமுகி, சிவகாசி.

    குடும்பச்சித்திரம்: பிரியசகி.நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறும் படம்: ஐயா.

    சிறந்த நடிகர்: விக்ரம் (அந்நியன்), விஜய் (திருப்பாச்சி), சரத்குமார் (ஐயா).

    சிறந்த நடிகை: ஜோதிகா (சந்திரமுகி), சதா (பிரியசகி), அசின் (சிவகாசி).

    சிறந்த இயக்குனர்: ஷங்கர் (அந்நியன்).

    சிறந்த பெண் இயக்குனர்: புவனா (ரைட்டா தப்பா).

    நகைச்சுவை நடிகர்: வடிவேலு.

    கதாசிரியர்: ஹரி (ஐயா).

    பாடலாசிரியர்: வாலி (சந்திரமுகி).

    இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (அந்நியன்).

    புதுமுக நடிகை: நயனதாரா (ஐயா).

    பின்னணிப் பாடகர்: கே.கே (ஐயா).

    பின்னணிப் பாடகி: சாதனா சர்கம் (ஐயா).

    சிறந்த தயாரிப்பாளர்: ஏ.எம். ரத்னம்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிறந்த நாடகம்: தீர்க்கசுமங்கலி, இது ஒருகாதல் கதை.

    சிறந்த இயக்குனர்: சி.ஜே. பாஸ்கர்(செல்வி).

    சிறந்த நடிகர்கள்: அபிஷேக், கமலேஷ்.

    நடிகைகள்: லதா ராவ், சுஜிதா.

    வில்லன்: அஜய்.

    வில்லி: டிங்கி.

    சிறந்த இசையமைப்பாளர்: ஹரிணி.

      Read more about: anniyan and ayya win awards
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X