»   »  சரிகாவுக்கு தேசிய விருது!ராணிமுகர்ஜிக்கு ஆப்பு!!

சரிகாவுக்கு தேசிய விருது!ராணிமுகர்ஜிக்கு ஆப்பு!!

Subscribe to Oneindia Tamil

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற கமலஹாசனின் முன்னாள் மனைவிசரிகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கானவிருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறும்கலைஞர்களை தேர்வு செய்ய கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி தலைமையில்குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தனது பரிந்துரைப் பட்டியலை மத்திய அரசிடம் கொடுத்துள்ளது.

இதில், அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. பிளாக் படத்தில்நடித்ததற்காக அமிதாப்புக்கு விருது கிடைத்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலிதான்இப்படத்தை இயக்கியுள்ளார். 3வது முறையாக அமிதாப்புக்கு தேசிய விருதுகிடைத்துள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவுக்குவழங்கப்படுகிறது.

குரஜாத் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பர்ஸானியா என்றபடத்தில் வன்முறையில் காணாமல் போன தனது மகனைத் தேடும் பார்ஸி இனப்பெண்ணாக நடிப்பில் வெளுத்து வாங்கியிருந்தார் சரிகா. இதற்காக அவரது பெயர்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறந்த படமாக கபில புருஷ் என்ற வங்காள மொழிப்படம் தேர்வாகியுள்ளது.இந்த படத்தை புத்ததேவ் தாஸ்குப்தா டைரக்ட் செய்துள்ளார்.

தவிர இக்பால் என்ற இந்தி படத்தில் நடித்த நஸ்ருதீன் ஷாவுக்கு சிறந்த துணைநடிகருக்கான விருதும் வழங்கப்படுகிறது. சிறந்த டைரக்டருக்கான விருது பிரதீப்சர்காருக்கு அறிவிக்கப்படவுள்ளது. பரினீதா என்ற படத்துக்காக இவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தேசிய அளவில் சிறந்த படமாக ரங்தே பசந்தி என்ற படம் தேர்வாகி உள்ளது. இந்தபடத்தை ராகேஷ் மெஹ்ரா டைரக்ட் செய்துள்ளார்.

மிக சிறந்த குறும்படமாக அபர்னா சென் டைரக்ட் செய்த 15 பார்க் அவனூத்ரு என்றஆங்கிலப் படம் தேர்வாகியுள்ளது.

இந்த விருதுப் பட்டியலில் தென்னிந்திய கலைஞர்கள் எவரையும் காணோம் என்பதுபெருத்த ஆச்சரியமாக உள்ளது.

இதற்கிடையே சிறந்த நடிகைக்கான விருது ப்ளாக் படத்திற்காக தனக்கு கிடைக்கும்என்று இந்தி நடிகை ராணி முகர்ஜியும், அவரது குடும்பத்தினரும் மிகவும்எதிர்பார்த்தனர்.

ஆனால் நினைப்பில் மண்ணைப் போடும் விதமாக சரிகாவுக்கு விருது கிடைத்துள்ளதுராணி முகர்ஜி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராணி முகர்ஜியின் தந்தைராம்முகர்ஜி இதுகுறித்துக் கூறுகையில்,

சிறந்த நடிகைக்கான விருது ராணிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால்சரிகாவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். இருந்தாலும் ராணிமுகர்ஜிக்குத்தான் சிறந்த நடிகைக்கான அறிவிப்பு வெளியாகும் என்றுஎதிர்பார்க்கிறோம் என்றார்.

விருதுப் பட்டியல் பாலன்ஸே இல்லாமல்இருப்பது போலத் தெரிகிறது.அதிகாரப்பூர்வமாக பட்டியல்வெளியானால்தான் என்ன நடந்திருக்கும் என்பதைஊகிக்க முடியும்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil