»   »  பட்டம்மாள், இளையராஜாவுக்கு விருது

பட்டம்மாள், இளையராஜாவுக்கு விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

கர்நாடக சங்கீத மேதை டி.கே.பட்டம்மாள், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட 31 பேருக்கு விர்ச்சுவோசா விருதுவழங்கப்படுகிறது.

இந்தியாவின் கிராமி விருது என்று இசையுலகினரால் செல்லமாக அழைக்கப்படுவது விர்ச்சுவோசா விருது. பிரபல கர்நாடகஇசைக் கலைஞர்களான சசிகிரண், செளம்யா ஆகியோர் இணைந்து ஏற்படுத்தியுள்ள கர்நாடிகா.காம் நிறுவனம் மூலம் இந்தவிருது வழங்கப்படுகிறது.

கர்நாடக இசை, திரை இசை, பாப் இசை, மெல்லிசை உள்ளிட்ட பல்வேறு இசைப் பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது.விருது விழா குறித்து சசிகிரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளிலும் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களுக்கு 31 பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. இதுதவிர வாழ்நாள் சாதனை விருதும் உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு நேரடி ஆய்வு, கருத்துக் கணிப்பு, மார்க்கெட் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மூலமாகவிருதுக்குரியவர்களை தேர்வு செய்துள்ளோம். கிராமி விருதுகளைப் போல, கலைஞர்களின் சமீப கால இசைத்தொகுப்புகளுக்குக் கிடைத்துள்ள வரவேற்பையும் கருத்தில் கொண்டு விருது பெற்றவர்களைத் தேர்வு செய்துள்ளோம்.

கர்நாடக இசைப் பிரிவில் டி.கே.பட்டம்மாளுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகிறது. இந்துஸ்தானி இசையில், கிராமிவிருது பெற்ற விஸ்வ மோகன் பட்டுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகிறது.

திரை இசையில், இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகிறது. மற்ற இசைப் பிரிவுகளுக்கானவிருதுகள் விழாவின்போது அறிவிக்கப்படும் என்றார் சசிகிரண்.

விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 19ம் தேதி காமராஜர் நினைவு அரங்கில் நடைபெறும். இந்த விழாவின்போது இசைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil