»   »  ஆஸ்கர் விருதுகளை அள்ளிய பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல், விப்லாஷ்

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல், விப்லாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: 87 வது ஆஸ்கர் விருது விழாவில் அதிக விருதுகளை அள்ளின பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் மற்றும் விப்லாஷ்.

2015 ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

பேர்ட்மேன்

பேர்ட்மேன்

இதில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளியது பேர்ட்மேன். அலெஜான்ட்ரோ ஜி இனாரிட்டு இந்தப் படத்தை இயக்கியிருந்தார். மைக்கேல் கீட்டன் நாயகனாக நடித்திருந்தார்.

தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்

தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த அசல் இசை, தயாரிப்பு வடிவமைப்பு, ஒப்பனை மற்றும் சிகையலங்காரம், சிறந்த உடையலங்காரம் ஆகிய நான்கு பிரிவுகளில் தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

விப்லாஷ்

விப்லாஷ்

இந்தப் படத்துக்கு சிறந்த துணை நடிகர், சவுண்ட் மிக்ஸிங், சிறந்த எடிட்டிங் ஆகிய மூன்று பிரிவுகளில் விப்லாஷ் படத்துக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

ஏமாற்றிய பாய்ஹூட்

ஏமாற்றிய பாய்ஹூட்

ரிச்சர்டு லிங்க்லேடர் இயக்கிய பாய்ஹூட் படம் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறந்த துணை நடிகைக்கான விருது மட்டுமே இந்தப் படத்துக்குக் கிடைத்தது.

English summary
Hollywood movies Birdman, The Grand Budapest Hotel and Whiplash shared maximum Oscar awards this year 2015.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil