»   »  கலைமாமணி சூர்யா-ஸ்னேகா

கலைமாமணி சூர்யா-ஸ்னேகா

Subscribe to Oneindia Tamil

சென்னை:


நடிகர்கள் விக்ரம், சூர்யா, வடிவேலு, நடிகைகள் ஜோதிகா, ஸ்னேகா உள்ளிட்ட 120 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோரும் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவிக்கிறது.

இந்த வகையில், 2004, 2005ம் ஆண்டுக்குரிய கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர்கள் விக்ரம், சூர்யா, வடிவேலு, நடிகைகள் ஜோதிகா, ஸ்னேகா, இயக்குனர் பி.வாசு மற்றும் தென்கச்சி சுவாமிநாதன் உள்ளிட்ட 120 பேர் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


2004ம் கலைமாமணி விருது பெறுவோர்:

நடிகைகள் கமலா காமேஷ், சி.ஆர்.சரஸ்வதி, சார்லி, பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், தென்கச்சி சுவாமிநாதன், மாதிரிமங்கலம் சுவாமிநாதன், பழனி தெய்வக்குஞ்சரம், ஜெயந்தி சுப்ரமணியம், கோபிகா வர்மா, கிரேஸி மோகன் உள்ளிட்ட 67 பேர்.

பொற்கிழி பெறுவோர்: நலிவடைந்த கலைஞர்களுக்கான பொற்கிழி பெறுவோர் ராணி சோமநாதன், சோமசுந்தர ஓதுவார், இசை நாடக நடிகை சாரதா.

2004ம் கலைமாமணி விருது பெறுவோர்: விருது வழங்கும் விழாவின்போது திறக்கப்படும் உருவப் படங்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி, செம்மங்குடி சீனிவாசய்யர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, வி.கே.ராமசாமி, இயக்குனர் மாதவன், நாகி ரெட்டி உள்ளிட்ட 12 பேரின் படங்கள்.


2005க்கான கலைமாமணி விருது பெறுவோர்:

நடிகர்கள் விக்ரம், சூர்யா, வடிவேலு, இயக்குனர் ரவிக்குமார், நடிகைகள் ஜோதிகா, ஸ்னேகா, இயக்குனர் வாசு, பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் , சுதா சேஷயன், பரதநாட்டிய ஆசிரியை ராதா, நாடக நடிகர் பி.ஆர்.துரை, கவிதாலயா கிருஷ்ணன், பாம்பே ஞானம், சாந்தி கணேஷ், ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரம் (இயக்குன வாசுவின் தந்தை)


பொற்கிழி பெறுவோர்: முருகேசன், சண்முகம், சீதாலட்சுமி.

உருவப் படங்கள்: நிகழ்ச்சியின்போது ஜெமினி கணேசன், மேஜர் சுந்ததரராஜன், பாடகி ஜிக்கி, நடிகை பானுமதி உள்ளிட்ட 7 பேரின் திருவுறுவப் படம் திறக்கப்படும்.

கலைமாமணி விருது பெறுவோருக்கு 3 பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்படும். நலிவடைந்த கலைஞர்களுக்கான பொற்கிழி பெறுவோருக்கு தலா ரூ. 15,000 வழங்கப்படும்.


வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவின்போது முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்கி கலைஞர்களைக் கெளரவிக்கிறார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் திரைத்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது திரைத் துறையினரை மேலும்குளிர்விக்கும் விதமாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருடமாக இல்லாமல் திடீரென இவை அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடுதான்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil