எம்மி விருதை வென்று அசத்திய பாரக் ஒபாமா: இவரு அமெரிக்க முன்னாள் அதிபரா இல்ல ஆல்ரவுண்டரா?

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அரசியலையும் கடந்து பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார்.

2009 முதல் 2017 வரை இரண்டு முறை அமெரிக்க அதிபராக பதவி வகித்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபரான பாரக் ஓபாமா எம்மி விருதை வென்று அசத்தியுள்ளார்.

அமெரிக்க அரசியல் நாயகன்

அமெரிக்க அரசியல் நாயகன்

அமெரிக்க அரசியலில் பாரக் ஒபாமா ஒரு புயலைப் போல வந்துச் சென்றார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஒபாமாவின் எளிமையும் பண்புகளும், உலக மக்களிடம் அவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது. அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒபாமாவின் 8 ஆண்டுகால ஆட்சி மிக முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் கூறுவதுண்டு.

சகலகலா வல்லவன் ஒபாமா

சகலகலா வல்லவன் ஒபாமா

அரசியல் மட்டுமின்றி இசை, விளையாட்டு என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார் ஒபாமா. அதனால், அவரது அனைத்து நடவடிக்கைகளும் மக்களால் உற்றுநோக்கிப் பார்க்கப்படுகிறது. கூடைப் பந்து வீரரான ஒபாமா, சினிமாத் துறையிலும் கலக்கி வருகிறார். அதனை நிரூபிக்கும் வகையில் இப்போது எம்மி விருதையும் வென்று அசத்தியுள்ளார். டுவைட் ஐசனோவருக்குப் பிறகு, எம்மி விருதை வென்ற 2வது அமெரிக்க அதிபர் என்ற பெருமை ஒபாமாவுக்கு கிடைத்துள்ளது.

பின்னணிக் குரலுக்காக விருது

பின்னணிக் குரலுக்காக விருது

'Our Great National Parks' எனும் Netflix நிறுவனத்தின் ஆவணத்தொடரில் இடம்பெற்ற காட்சிகளுக்கு பாரக் ஒபாமா பின்னணி விளக்கக்குரல் கொடுத்திருந்தார். அதற்காக அவருக்கு தற்போது இந்த Emmy விருது வழங்கப்பட்டுள்ளது. கரீம் அப்துல்-ஜப்பார், டேவிட் அட்டன்பரோ, லூபிடா நியோங்கோ உட்பட, பலரும் இந்த பிரிவில் ஒபாமாவுடன் இந்தப் பிரிவில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஒபாமாவுக்கு ஏற்கனவே இரண்டு Grammy விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நோபல் பரிசை வென்றவர் ஒபாமா

நோபல் பரிசை வென்றவர் ஒபாமா

"The Audacity of Hope", "Dreams from My Father" என்ற தலைப்புகளில் வெளியிடப்பட்ட அவரது வாழ்நாள் நினைவுக் குறிப்புகளுக்கான ஒலிப்பதிவுகளுக்கு Grammy விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 2008ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் பாரக் ஒபாமா. அனைத்துலக நட்புறவு, மக்களிடையிலான ஒத்துழைப்புப் போன்றவற்றில் அவர் பெரிய அளவிலான முயற்சிகள் மேற்கொண்டதற்கு அங்கீகாரமாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஒபாமாவுக்கு எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது. .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X