Don't Miss!
- News
"அற்பத்தனமானது.." துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பதா? திக்விஜய் சிங்கை சாடிய ராகுல் காந்தி
- Finance
அமெரிக்காவுக்குப் போட்டியாக இந்திய நிறுவனங்கள்.. ஊழியர்கள் தான் பாவம்..!
- Automobiles
ரொம்ப பழசு போல தெரிஞ்சாலும் உடனே புதுசுபோல மாத்திடலாம்... வெது வெதுவெனு தண்ணி, சோப்பு கரைசலே போதும்!
- Sports
நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஜேம்ஸ் கேமரூனுக்கும் ஸ்பீல்பெர்க்குக்கும் தான் போட்டியே.. ஆஸ்கர் நாமினேஷனில் அவதார் 2 ஆதிக்கம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் என உலகமே வியந்து பார்த்து வரும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் இருவருக்கும் இடையே தான் ஆஸ்கர் போட்டியில் பெரும் போட்டி நிலவி வருகிறது. கூடுதலாக அந்த ரேஸில் டாம் க்ரூஸின் டாப்கன் மேவரிக் படமும் இணைந்துள்ளது.
ஆஸ்கர் 2023 விருது விழா வரும் மார்ச் 13ம் தேதி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அந்த விருது விழாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலில் அவதார் 2, ஃபேபல்மேன், எல்விஸ், டாப்கன் மேவரிக், பேட்மேன், வக்காண்டா ஃபாரெவர் உள்ளிட்ட பல பிரபலமான ஹாலிவுட் படங்கள் இடம் பெற்றுள்ளன.
Oscars 2023 Nominations Complete List: 4 பிரிவுகளில் இந்திய படங்கள் தேர்வாகி சாதனை.. ஆஸ்கர் லிஸ்ட்!

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2
2009ல் வெளியான அவதார் படம் உலகின் நம்பர் ஒன் வசூல் படமாக மாறிய நிலையில், அவதார் 2 திரைப்படம் 13 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டை செய்தது மட்டுமின்றி ஆஸ்கர் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி உள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த தயாரிப்பு, சிறந்த ஒலி உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வாகி உள்ளது.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் தி ஃபேபல்மேன்ஸ்
எனக்கும் எங்க மாமா ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்கும் தான் போட்டியே என ஜேம்ஸ் கேமரூனும் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்கும் இந்த முறை பல பிரிவுகளில் தங்கள் படங்கள் மூலம் போட்டி போடுகின்றனர். சிறந்த இயக்குநர் பிரிவில் ஜேம்ஸ் கேமரூன் இடம்பெறாத நிலையில், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் The Fabelmans படத்திற்காக இடம்பெற்று கெத்துக் காட்டி உள்ளார். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த தயாரிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் இந்த படம் தேர்வாகி உள்ளது.

டாம் க்ரூஸின் டாப்கன்
டாப்கன் மேவரிக் படம் மூலம் கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை உலகளவில் நிகழ்த்திய நடிகர் டாம் க்ரூஸ் ஆஸ்கர் போட்டியிலும் கடும் போட்டியை கொடுத்துள்ளார். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த இசை, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் டாப்கன் மேவரிக் இடம் பிடித்துள்ளது.

பேட்மேன் அசத்தல்
டிசி காமிக்ஸ் திரைப்படமான பேட்மேன் திரைப்படமும் குறிப்பிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் போட்டிக்கு நாமினேட் ஆகி அசத்தி உள்ளது. மேலும், வக்காண்டா ஃபாரெவர், எல்விஸ் உள்ளிட்ட படங்களும் ஆஸ்கர் போட்டியில் பல பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. ஆஸ்கர் விருதுகளை இதில் எந்த படம் வெல்லப் போகுது என்பதை மார்ச் மாதம் அறிந்து கொள்ளலாம்.