»   »  விருது வழங்கினார் ஜெ; திரைத் துறையினருக்கு அறிவுரை!

விருது வழங்கினார் ஜெ; திரைத் துறையினருக்கு அறிவுரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிசம்பர் 04, 2004

விருது வழங்கினார் ஜெ; திரைத் துறையினருக்கு அறிவுரை!


நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தமிழக அரசின் திரைப்பட விருதுகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா,திரைப்படங்களை மட்டும் எடுக்காமல் திரைப்பாடங்களையும் எடுங்கள் என்று திரைத் துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

2000, 2001 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னைபல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.

2000ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான விருது வானத்தைப் போல, வானவில், வெற்றிக் கொடி கட்டு ஆகிய படத்தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது முரளி, நடிகைக்கான விருது தேவயானி, வில்லன் நடிகராகபிரகாஷ் ராஜ், நகைச்சுவை நடிகராக வடிவேலு, இயக்குநராக விக்ரமன், இசையமைப்பாளராக தேவா ஆகியோருக்கு விருதுவழங்கப்பட்டது.

2001ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக விரும்புகிறேன், பாண்டவர் பூமி, ஆனந்தம் மற்றும் சிறப்பு விருது நந்தாவுக்குவழங்கப்பட்டது.

சிறந்த நடிகராக சூர்யா, நடிகையாக சினேகா, சிறப்பு நடிகர் பரிசை அஜீத், சிறந்த சிறப்பு நடிகையாக சுவலட்சுமி,வில்லனாக அலெக்ஸ், நகைச்சுவை நடிகராக வடிவேலு ஆகியோர் விருது பெற்றனர். சிறந்த இயக்குநர் சுசி. கணேசன்,இசையமைப்பாளர் வித்யாசாகர் ஆகியோரும் விருது பெற்றனர்.

2002ம் ஆண்டின் சிறந்த படங்களாக ரமணா, கன்னத்தில் முத்தமிட்டால், உன்னை நினைத்து, சிறப்புப் படமாக கிங் ஆகியவைவிருது பெற்றன. சிறந்த நடிகராக மாதவன், நடிகையாக மீனா, சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு பிரபு, நடிகைக்கான சிறப்புப் பரிசுநந்திதா தாஸ், வில்லனாக நாசர், நகைச்சுவை நடிகராக விவேக் ஆகியோர் பரிசு பெற்றனர்.

சிறந்த இயக்குநராக மணிரத்தினம், இசையமைப்பாளராக சிற்பி ஆகியோரும் பரிசுகள் பெற்றனர். இதுதவிர பழம் பெரும்கலைஞர்களுக்கான கலைச்செல்வம் விருதுகளையும் ஜெயலலிதா வழங்கினார்.


அஞ்சலி தேவி, பத்மினி, குன்னக்குடி வைத்தியநாதன், ஜமுனா, வரலட்சுமி, சுகுமாரி, எம்.என்.ராஜம், பாரதிராஜா,ராஜசுலோசனா, கே.பாலாஜி, பி.எஸ்.சரோஜா, வாணிஸ்ரீ, ரவிச்சந்திரன், வைஜெயந்திமாலா, ஜமுனா ராணி, பி.பி. ஸ்ரீ னிவாஸ்,இ.வி.சரோஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.சரோஜா ஆகியோருக்கு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்பட்டன.

சமீபத்தில் மறைந்த ஜி.சகுந்தலாவுக்கு தியாகராஜ பாகவதர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் இறந்ததால் விருதுவழங்கப்படவில்லை.

விருதுகளை வழங்கி முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சினிமா தொழில் அழிந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டபோது,அதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தேன்.

இன்று திருட்டு விசிடி விற்கப்பட்ட கடைகள் புத்தக கடைகளாக மாறிவருகின்றன.

இந்த மாற்றங்கள் தமிழ்த் திரை உலகில் புதிய எழுச்சியை ஏற்படுத்தும். இந்த எழுச்சியைப் பயன்படுத்தி ஜீவனுள்ள படைப்புகளைதிரைத் துறையினர் மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஜீவனுடன் ஒரு படைப்பு உருவாகும்போது அது காலங்களையும் தாண்டி வாழும் காவியமாகிறது.

அப்போது அது திரைப்படம் அல்ல, திரைப்பாடம். சமூக அக்கறை திரைத் துறையினருக்கு அதிகம் உள்ளது. அதை நீங்கள்உணர்ந்து நடக்க வேண்டும்.

வன்முறையை வளர்க்கும் படங்களை எடுக்காதீர்கள், ஆதாய ஆசையில் ஆபாசத்தை வளர்க்காதீர்கள், காவல்துறையைகேவலமாக சித்தரிக்காதீர்கள். சமூக கோளாறுகளை சுட்டிக் காட்டுங்கள்.

மூட நம்பிக்கைகள், பெண் அடிமைத்தனம், சாதி வேற்றுமையை தகர்த்து எறியுங்கள்.

சமூகமே கோளாறு என காட்டி விடாதீர்கள், உங்களுடைய பொறுப்பு மிகப் பெரியது என்பதை உணருங்கள். தாங்கள் எப்படிஇருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் ரசிகர்களை மகிழ்வூட்டுபவர்கள்தான் கலைஞர்கள் என்றார் ஜெயலலிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil