»   »  சைப்ரஸ் பட விழாவில் ஜீவா, யுவன் ஷங்கருக்கு விருது

சைப்ரஸ் பட விழாவில் ஜீவா, யுவன் ஷங்கருக்கு விருது

Subscribe to Oneindia Tamil

சைப்ரஸ் நாட்டில் நடந்த சர்வதேசப் பட விழாவில் சிறந்த நடிகராக ராம் படத்தில்நடித்த ஜீவாவும், சிறந்த இசையமைப்பாளராக ராம் படத்திற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு சர்வதேச விருதைப் பெறும் 2வது தமிழகநடிகர் என்ற பெருமை ஜீவாவுக்குக் கிடைத்துள்ளது.

அமீரின் இயக்கத்தில் ஜீவா, கஜாலா, சரண்யா நடித்த ராம் படம் சைப்ரசில் நடந்தசர்வதேச பட விழாவில் போட்டிப் பிரிவில் கலந்து கொண்டது. ராம் தவிர மேலும் 10சர்வதேசப் படங்களும் விருதுப் பிரிவில் போட்டியிட்டன.


இதிலிருந்து சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்டோர்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் சிறந்த நடிகருக்கான விருது ஜீவாவுக்குக் கிடைத்துள்ளது. சிறந்தஇசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்.விருதுகள் அறிவிக்கப்பட்டபோது இருவரும் சென்னையில் இருந்தனர்.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தசர்வதேச பட விழாவில்சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மமன் படம்விருதுப் போட்டியில் கலந்து கொண்டது. சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகர் விருதுகிடைத்தது.


சிறந்த இசையமைப்பாளராக ஜி.ராமநாதன் தேர்வு செய்யப்பட்டார். இதற்குப் பின்னர்தற்போதுதான் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் ஒருவருக்கு சிறந்த நடிகர் விருதுகிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருது குறித்து ஜீவா கூறுகையில், இந்த விருதுக்கு எனது பெற்றோரின் ஆசியும்,இயக்குனர் அமீரும்தான் காரணம். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு என் மீது சுமத்தப்பட்டுள்ளதாகஉணர்கிறேன் என்றார்.

யுவன் ஷங்கர் ராஜாவும் விருது குறித்து படு சந்தோஷமாக உள்ளார். விருது குறித்தசெய்தி அவரை அடைந்தபோது, அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது படபின்னணி இசைக் கோர்ப்பில் அவர் மும்முரமாக இருந்தார்.


செய்தி வந்ததும், உடனடியாக வேலையை நிறுத்தி விட்டு தனது தாயார் ஜீவாவைத்தொடர்பு கொண்டு செய்தியைக் கூறினார்.

இதைக் கேட்டதும் ஜீவா சந்தோஷமடைந்து யுவனை வாழ்த்தியுள்ளார். விருது குறித்துயுவன் கூறுகையில், இது நிச்சயம் கடவுளின் பரிசுதான். இது எனக்கு மட்டும் கிடைத்தவிருதாக நான் கருதவில்லை. ஒட்டு மொத்த ராம் பட யூனிட்டுக்கே கிடைத்த பரிசு.

இந்தப் படத்தின் பாடல்கள், பின்னணி இசை என அனைத்துமே பாராட்டப்பட்டன.ஆராரிராரோ பாடலுக்குத்தான் நான் முதலில் இசையமைத்தேன். அந்தப் பாடலைமுடித்த பின்னர் எனது தாயாரிடம் போட்டுக் காண்பித்தேன். அவர் அழுதே விட்டார்.அப்போதே எனக்கு விருது கிடைத்து விட்டது.

இப்போது சைப்ரஸ் பட விழாவில் எனக்கு விருது கிடைத்த செய்தியைக் கூறியதும்அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாகி விட்டது என்றார் யுவன்.

தமிழ் திரையுலகுக்கு சர்வதேச பெருமையை பெற்றுக் கொடுத்த நடிகர் ஜீவா, யுவன் ஷங்கர் ராஜாவை நாமும் வாழ்த்துவோம்!

சைப்ரஸ் பட விழாவில் ராம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil