»   »  தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது... சிறந்த படம் பாகுபலி, காக்கா முட்டை!

தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது... சிறந்த படம் பாகுபலி, காக்கா முட்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ்ப் படமாக காக்கா முட்டை விருது பெற்றது.

தெலுங்கில் சிறந்த படமாக பாகுபலி ஃபிலிம்பேர் விருது பெற்றது.

தென்னிந்திய சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழாவான தென்னிந்திய ஃபிலிம்பேர் விழா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

மலையாளம் - கன்னடம்

மலையாளம் - கன்னடம்

மலையாளத்தில் சிறந்த திரைப்படமாக ''பதேமாரி'', கன்னடத்தில் சிறந்த திரைப்படமாக ''ரங்கிதாரங்கா'' ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.

அனுஷ்கா

அனுஷ்கா

மலையாளத்தில் ''என்னு நின்டே மொய்தீன்'' திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது ஆர்.எஸ். விமலுக்குக் கிடைத்தது. ''ருத்ரம்மாதேவி'' படத்தில் நடித்த அனுஷ்காவுக்கு சிறந்த முன்னணி கதாபத்திரம் விருது வழங்கப்பட்டது.

மம்முட்டி

மம்முட்டி

மலையாளத்தில் சிறந்த முன்னணி கதாபாத்திர விருது மகேஷ் பாபுவுக்கும், கன்னடத்தில் சிறந்த முன்னணி கதாபாத்திர விருது புனீத் ராஜ்குமாருக்கும், மலையாளத்தில் பதேமாரி படத்தில் நடித்த மம்முட்டிக்கும் வழங்கப்பட்டது.

காக்கா முட்டை

காக்கா முட்டை

தமிழில் சிறந்த திரைப்பட விருதை காக்கா முட்டை பெற்றுள்ளது. தமிழில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

தமிழ் திரையுலகுக்கு கிடைத்துள்ள மேலும் சில பிலிம் ஃபேர் விருதுகள்:

சிறந்த இயக்குனர் - எம். ராஜா - தனி ஒருவன்
சிறந்த நடிகர் - விக்ரம்
சிறந்த நடிகை - நயன்தாரா - நானும் ரவுடிதான்
சிறந்த துணை நடிகர் - அரவிந்த் சாமி - தனி ஒருவன்
சிறந்த துணை நடிகை - ராதிகா சரத்குமார் - தங்கமகன்

ஏ ஆர் ரஹ்மான்

ஏ ஆர் ரஹ்மான்

சிறந்த இசை - ஏ.ஆர். ரஹ்மான் - ''ஐ''
திரைப்படம் சிறந்த பாடலாசிரியர் - மதன் கார்கி - பூக்களே சற்று...
சிறந்த பின்னணி பாடகர் - சித் ஸ்ரீராம் - என்னோடு நீ இருந்தால்...
சிறந்த பின்னணி பாடகி - ஸ்வேதா மோகன் - என்ன சொல்ல...

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

சிறந்த ஜூரி விருது - ஜெயம் ரவி - தனி ஒருவன்
சிறந்த ஜூரி விருது (பெண்) - ஜோதிகா - 36 வயதினிலே

English summary
Kakka Muttai has got the best Tamil movie award at the annual South Filmfare award event.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil