»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிம்ரன் உள்பட பல நடிகர், நடிகைகளுக்கு தமிழகஅரசின் விருதுகள் வழங்கப்பட்டன.

1999-ம் ஆண்டிற்கான கலைஞர்களுக்கான பல விருதுகளும் நடிகர், நடிகைகளுக்குமுதல்வரால் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இந்த விழா வள்ளுவர் கோட்டத்தில்நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் அவர் வழக்கமாக அணிந்து வரும் பைஜாமா குர்தாவில்வந்து சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுக் கொண்டார். அவர் விருது வாங்க சென்றபோது ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

நடிகர் திலகம் சிவாஜி விருதை கமல்ஹாசன் வென்றார். அந்த விருதை கமல்ஹாசன்சார்பாக அவரது மனைவி சரிகா கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த நடிகைக்கான விருதை சிம்ரன் பெற்றிருந்தார். சிம்ரனின் சார்பாக அவரது தாயார்அந்த விருதை பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு முறை நடிகர்கள் மேடையேறிய போது காமிராக்களின் ஒளி வெள்ளத்தைபாய்ச்சின. பல வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததற்காக கமல்ஹாசனுக்குநடிகர் திலகம் சிவாஜி விருது வழங்கப்பட்டது.

படையப்பா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரஜினிகாந்த்திற்கு சிறந்த நடிகர் விருதுவழங்கப்பட்டது. நடிகர் விஜய்க்கு எம்.ஜி.ஆர். விருது வழங்கப்பட்டது.

மும்பையில் பிறந்த நடிகையான சிம்ரன் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்காக சிறந்தநடிகை விருதை வென்றார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்துவென்றார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.சங்கமம் படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ரஹ்மானுக்கு விருதுவழங்கப்பட்டது.

புதிய இயக்குனர் பாலாவுக்கு சேது படத்தை சிறப்பாக இயக்ககியதற்காக சிறந்தஇயக்குனர் பரிசு வழங்கப்பட்டது.

சேது படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த விக்ரமுக்கும், படையப்பாபடத்தில் திமிர் பிடித்த பெண்ணாக நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் சிறப்புபரிசுகள் வழங்கப்பட்டன.

இயக்குனரும், வசனகர்த்தாவுமான மகேந்திரனுக்கு அறிஞர் அண்ணா விருதுவழங்கப்பட்டது. இயக்குனர் சங்கருக்கு ராஜா சாண்டோ விருது வழங்கப்பட்டது.

கவிஞர் கண்ணதாசன் விருது கவிஞர் காமகோடியானுக்கு வழங்கப்பட்டது. தியாகராஜபாகவதர் விருது முன்னாள் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

கலைவாணர் விருது முன்னாள் நடிகர் காகா ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

பிற விருதுகள் விவரம்:

  • சிறந்த வில்லன் நடிகர் -ரகுவரன்.
  • நகைச்சுவை நடிகர் - விவேக்.
  • கதாசிரியர் - ராஜகுமாரன்.
  • வசனகர்த்தா - சிவராம் காந்தி.
  • கலை இயக்குனர் - கிருஷ்ணமூர்த்தி.
  • ஸ்ரீநிவாஸ் - சிறந்த பாடகர்.
  • எஸ். ஜானகி - சிறந்த பாடகி.
பெண்களின் சிறப்பை வெளிப்படுத்தியதாக ஆனந்த பூங்காற்றே படத்திற்கு சிறப்புவிருது வழங்கப்பட்டது. விருது பெற்ற கலைஞர்கள் சார்பாக ரஜினிகாந்த்,கமல்ஹாசன், வைரமுத்து நன்றி தெரிவித்து பேசினர்.

யு.என்.ஐ.

Read more about: awards, chennai, cinema, tamialnadu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil