twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற நடிகர்களின் லிஸ்ட் !

    |

    சென்னை : தேசிய திரைப்பட விருது இந்திய அரசயால் 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்வது, நடிகர், நடிகைகள், பின்னணி இசை, நடனம், இசை என தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.

    தற்போது 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள நிலையில், தமிழ் சினிமாவில் தேசிய விருதுகள் பெற்ற நடிகர்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

    எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆர்

    முதன் முதலில் தேசிய விருதை பெற்ற நடிகர் என்ற பெருமைக்குரியவர்

    எம்.ஜி.ராமச்சந்திரன். எம்.ஜி.ஆர். என அனைவரும் அன்போடு அழைக்கும் அவர்களுக்குத்தான் சிறந்த நடிகருக்கான விருது முதன் முதலில் கிடைத்தது. 1971ம் ஆண்டு எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த ரிக்ஷாக்காரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழக்கப்பட்டது.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    1982ம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படத்திற்கு வழக்கப்பட்டது. இதில், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

    2வது முறையாக

    2வது முறையாக

    1987ம் ஆண்டு மீண்டும் சிறந்த நடிகருக்கான விருதை நாயகன் படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் தட்டிச் சென்றார். தமிழ் திரைப்படம் மட்டுமின்றி இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது நாயகன். இப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கினார்.

    3வது முறையாக சிறந்த நடிகர்

    3வது முறையாக சிறந்த நடிகர்

    கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இயக்குநர் ஷங்கர் இதனை இயக்கி இருந்தார். ஊழலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இதன் திரைக்கதை இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க செய்தது. இப்படத்தில் இளைஞராகவும் வயதானவராகவும் கமல் மிரட்டி இதில் நடித்ததற்காக சிறந்தநடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

    விக்ரம்

    விக்ரம்

    இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா உட்பட பலர்நடிப்பில் 2003ல் வெளியான படம் பிதாமகன் இந்தப் படம் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமுக்கு மிக முக்கியமான படம். இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது.

    பிரகாஷ் ராஜ்

    பிரகாஷ் ராஜ்

    உழுபவனுக்கு நிலம் இல்லை என்பது போன்று, நெய்பவனுக்கு ஆடை இல்லை என்ற எதார்த்தத்தை பேசிய திரைப்படம் காஞ்சிவரம். தமிழில் அதுவரை வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த பிரகாஷ்ராஜ் 2007ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

    தனுஷ்

    தனுஷ்

    2010ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்ததற்க சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார். அதே போல தற்போது அறிவித்துள்ள 2019 ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பிலும், வெற்றி மாறன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

    English summary
    List of National Award winning Tamil actors
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X