»   »  ஆஸ்கர் 2017...வயோலா டேவிஸ், மஹேசர்லா அலிக்கு சிறந்த துணை நடிகர் விருது!

ஆஸ்கர் 2017...வயோலா டேவிஸ், மஹேசர்லா அலிக்கு சிறந்த துணை நடிகர் விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2017-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதினை மஹேசர்லா அலி (Mahershala Ali) வென்றுள்ளார்.

மூன்லைட் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் தந்தை வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் மஹேசர்லா.

Mahershala Ali wins Oscar for best supporting role

ஆஸ்கர் விருது பெறும் முதல் இஸ்லாமிய நடிகர் மஹேசர்லா என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறந்த துணை நடிகை வயோலா டேவிஸ்

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது ஃபென்சஸ் படத்தில் நடித்த வயோலா டேவிஸுக்குக் கிடைத்தது. எம்மி, கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ள வயோலா பெறும் முதல் ஆஸ்கர் விருது இது.

English summary
Mahershala Ali has won Oscar award for best supporting role in Moonlight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil