»   »  "நாயகன்" படத்திற்கு புது கெளரவம் !

"நாயகன்" படத்திற்கு புது கெளரவம் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிரத்தினம் இயக்கி, கமல்ஹாசன் நடித்து, இசைஞானி இளையராஜாவின் அற்புத இசையில் உருவான நாயகன் படம், உலகின்தலைசிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக புகழ் பெற்ற "டைம்" பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை, கடந்த 1927ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரையில் உலகின் பல்வேறுபகுதிகளில், பல்வேறு மொழிகளில் வெளியான தலை சிறந்த 100 திரைப்படங்களைத் தேர்வு செய்துள்ளது.

இந்த 100 படங்களில் கமல்ஹாசனின் நாயகனும் ஒன்று. இந்தப் படம் குறித்த டைம் பத்திரிக்கையின் குறிப்பில், ஹாலிவுட்திரைப்பட இயக்குநர்களை பொறாமைப்பட செய்யும் வகையில், நாயகன் படத்தில் கதையை அமைத்திருந்தார் மணிரத்தினம்.கதை சொல்லிய விதமும், ஒளிப்பதிவும் (பி.சி.ஸ்ரீராம்) மிக அருமையாக இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளது.

1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் கமல்ஹாசன், ஜனகராஜ், நாசர், சரண்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வேலுநாயக்கர் என்ற மும்பை தாதாவாக கமல்ஹாசன் நடித்திருந்தார். பி.சி. ஸ்ரீராமின் கேமராவும், இளையராஜாவின் இசையும்,மணிரத்தினத்தின் இயக்கமும் சேர்ந்து படத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அது மட்டுமல்லாமல்,கமல்ஹாசனுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகர் விருதையும் பெற்றுக் கொடுத்தது.

நாயகன் தவிர சத்யஜித்ரேயின் "அபு டிரையாலஜி", குரு தத்தின் "பியாசா" ஆகிய படங்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.டைம் பத்திரிக்கையின் இணையதளத்தில் 100 படங்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.

மணிரத்தினத்தின் திரைப்படம் ஒன்று உலக அளவில் பேசப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே தளபதிபடத்தில் இடம் பெற்ற "ராக்கம்மா கையைத் தட்டு பாட்டு உலகின் தலை சிறந்த பாடலாக பிபிசி நிறுவனத்தால் தேர்வுசெய்யப்பட்டது. இதையடுத்து தற்போது நாயகன், உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது, தமிழ்சினிமாவுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

உலக அளவில் அதிகம் பேசப்பட்ட, காஸாபிளான்கா, சைனா டவுன், ஈ.டி, தி காட்பாதர், லாரன்ஸ் ஆப் அராபியா,மெட்ரோபோலிஸ், சைக்கோ, ஷின்ட்லர்ஸ் லிஸ்ட், ஸ்டார் வார்ஸ், டாக்ஸி டிரைவர் உள்ளிட்ட படங்களும் இந்த பட்டியலில்இடம் பெற்றுள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil