»   »  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் விருது

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் விருது அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயடு அறிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிப் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். படங்களில் நடித்துள்ளதுடன் இசையும் அமைத்துள்ளார்.

Modi govt. announces award for legendary singer SPB

தேன் குரலுக்கு சொந்தக்காரரான பாலசுப்பிரமணியத்திற்கு இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் விருது கிடைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளார்.

47வது சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து எஸ்.பி.பி. கூறுகையில்,

விருது கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த திரைத்துறையினர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

English summary
Central minister Venkaiah Naidu has announced that legendary singer SP Balasubramaniam will be given Indian film personality of the year award at the 47th international film festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil