»   »  விஜய் சேதுபதிக்கு 'இளம் வசூல் நாயகன்' விருது!

விஜய் சேதுபதிக்கு 'இளம் வசூல் நாயகன்' விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து 5 வெற்றிப் படங்களில் நடித்து கோடம்பாக்கத்தை ஆச்சர்யப்பட வைத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு புதிய விருது ஒன்றினை அளித்துள்ளது ஆங்கிலப் பத்திரிகை ஒன்று.

அந்த விருது 'The Most Bankable Young Hero'. அதாவது கோடம்பாக்கத்தின் இளம் வசூல் நாயகன்.

Most Bankable Young Hero award for Vijay Sethupathy

விஜய் சேதுபதி நடிக்க வந்த புதிதில் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. எந்த ஒரு சினிமா பின்புலமும் சிபாரிசும் இல்லாமல், ஒரு துணை நடிகராய் புதுப்பேட்டை, லீ போன்ற படங்களில் நடித்தவர், தென்மேற்குப் பருவக்காற்று, வர்ணம் போன்ற படங்களின் மூலம் பளிச்சென்று வெளியில் வந்தார். அவரை பிரபலமாக்கிது சுந்தரபாண்டியன். தனி ஹீரோவாக நிலைக்க வைத்தன பிட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

அதன் பிறகு விர்ரென்று பயணித்தது அவரது சினிமா வாழ்க்கை. இடையில் ஆரஞ்சு மிட்டாய், பண்ணையாரும் பத்மினியும் என சின்னச் சின்ன ஏமாற்றங்கள்.

இந்த இரு ஆண்டுகளில் விஜய் சேதுபதி நடித்த அத்தனைப் படங்களும் ஹிட் அல்லது சூப்பர் ஹிட்.

இன்றைய இளம் நடிகர்களில் சேதுபதி, நானும் ரவுடிதான், காதலும் கடந்து போகும், தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என 5 தொடர் வெற்றிப் படங்களைத் தந்துள்ள ஒரே நாயகன் விஜய் சேதுபதிதான். அடுத்தடுத்து அவரது படங்கள் ரீலீசுக்கு அணி வருக்கின்றன.

இந்த பின்னணியில்தான் விஜய் சேதுபதிக்கு 'இளம் வசூல் நாயகன்' விருது வழங்கப்பட்டது.

English summary
Promising actor Vijay Sethupathy was awarded the Most Bankable Young Hero on yesterday by an English magazine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil