»   »  நாகேஷுக்கு எம்.ஜி.ஆர். விருது

நாகேஷுக்கு எம்.ஜி.ஆர். விருது

Subscribe to Oneindia Tamil

பழம் பெரும் நடிகர் நாகேஷுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்கப்படுவதாக எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் நடிகர்நாகேஷ், வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்கப்படுகிறது.

வருகிற 21ம் தேதி சென்னை நாரதகான சபாவில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

முன்னதாக அன்று காலை 8 மணியளவில் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்குஎம்.ஜி.ஆர். கழகம் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறியுள்ளார் ஆர்.எம்.வீரப்பன்.

Read more about: nagesh to get mgr award
Please Wait while comments are loading...