»   »  தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு.. விருதுப் போட்டியில் இருக்கும் படங்கள்!

தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு.. விருதுப் போட்டியில் இருக்கும் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீதேவிக்கு தேசிய விருது. சிறந்த தமிழ்படம் To Let

சென்னை : கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 65-வது தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் கமிட்டி சேகர் கபூர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

விருதுத் தேர்வுக் குழுவில் நடிகை கௌதமியும் இடம்பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறும். சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

National film awards to be announced soon

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 'அறம்', 'தரமணி', 'மெர்சல்', 'குரங்கு பொம்மை', 'விக்ரம் வேதா', 'வேலைக்காரன்', 'அருவி', 'ப.பாண்டி' உள்ளிட்ட பட படங்கள் விருதுக்கான போட்டியில் இருக்கின்றன.

இவற்றில் எந்தப் படம், எந்தக் கலைஞர்கள் விருதுபெற இருக்கிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும். இயக்குநர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

மலையாளத்தில் வெளியான 'தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும்', 'டேக் ஆஃப்', 'அங்கமாலி டயரீஸ்' உள்ளிட்ட படங்கள் தேசிய விருது பெறும் என மலையாள சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடிகை பார்வதி சிறந்த நடிகை விருது பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

English summary
National film awards to be announced today. Shekar kapoor is the chairman of the central jury panel. South indian Actress Gauthami also in the jury panel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X