»   »  ஆஸ்கர் விருதுகள்: 2006

ஆஸ்கர் விருதுகள்: 2006

Subscribe to Oneindia Tamil

லாஸ் எஞ்ஜெல்ஸ்:


சிறந்த படத்துக்கான இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதை க்ராஷ் வென்றுள்ளது.

78வது ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன.


சிறந்த படம், சிறந்த படத் தொகுப்பு, சிறந்த திரைக்கதை என மூன்று விருதுகளை இந்தப் படம் வென்றது.

சிறந்த இயக்குனருக்கான விருதை புரூக்பேக் மெளன்டன் படத்தை இயக்கியதற்காக ஆங் லீ வென்றார்.


சிறந்த நடிகராக பிலிப் செய்மோர் ஹாப்மேன் வென்றார். கபோடே என்ற படத்திற்காக அவருக்கு இந்த விருதுவழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக ரெஸ்ஸீ விதர்ஸ்பூன் தேர்வானார். வாக் த லைன் படத்துக்காக இந்தவிருதை அவர் வென்றார்.

சிறந்த துணை நடிகைக்கான விருதை பிரிட்டனைச் சேர்ந்த ரேச்சல் வெய்ஸ் வென்றார். த காண்ஸ்டன்ட் கார்டனர்படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது. சிறந்த துணை நடிகருக்கான விருதை சிரியனா என்ற படத்தில்நடித்த ஜார்ஜ் க்லூனி வென்றார்.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் மியூனிக் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை. இஸ்ரேலியஒலிம்பிக் வீரர்களை பால்ஸதீன தீவிரவாதிகள் தாக்கிக் கொன்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுஎடுக்கப்பட்ட படம் இது.

சிறந்த டாகுமெண்டரிக்கான ஆஸ்கர் விருதை பிரஞ்சுப் படமான மார்ச் ஆப் பென்குயின்ஸ் வென்றது.இங்கிலாந்தின் வேலஸ் அண்ட் கோர்மிட் சிறந்த அனிமேசன் படத்துக்கான விருதை வென்றது.


கிங்காங் படத்துக்கு சிறந்த விசுவல் எபெக்ட்ஸ்சுக்கான விருது கிடைத்தது.

சிறந்த கேமராமேனுக்கான விருது டியான் பீபிக்குக் கிடைத்தது. மெமோய்ர்ஸ் ஆப் கீய்சா என்ற படத்துக்கு இந்தவிருது கிடைத்தது. இந்தப் படத்துக்கு சிறந்த ஆர்ட் டைரக்ஷனுக்கான விருதும், சிறந்த காஸ்ட்யூம்ஸ்சுக்கானவிருதும் வழங்கப்பட்டன.


சிறந்த வெளிநாட்டுப் படமாக தென் ஆப்பிரிக்காவின் சோட்சி தேர்வானது.
Read more about: crash wins 3 oscars
Please Wait while comments are loading...