»   »  ஆஸ்கர் 2015: இன்டர்ஸ்டெல்லாருக்கு சிறந்த கிராபிக்ஸுக்கான விருது.. சிறந்த துணை நடிகர் சிம்மன்ஸ்!

ஆஸ்கர் 2015: இன்டர்ஸ்டெல்லாருக்கு சிறந்த கிராபிக்ஸுக்கான விருது.. சிறந்த துணை நடிகர் சிம்மன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் இந்த விழாவில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜே.கே. சிம்மன்ஸ் பெற்றுள்ளார். விப்லாஷ் திரைப்படத்தில் நடத்ததற்காக ஜே.கே. சிம்மன்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். விருது பெற்ற சிம்மன்ஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பட்ரிசியா அர்க்யூட் பெற்றுள்ளார். பாய்ஹூட் படத்தில் நடித்ததற்காக பாட்ரிகா அர்கியூட்டுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டுப் படம்

சிறந்த வெளிநாட்டுப் படம்

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை போலந்து நாட்டை சேர்ந்த இடா தட்டிச் சென்றது. சிறந்த ஒப்பனை கலைஞருக்கான ஆஸ்கர் விருதை பிரான்சிஸ், மார்க் குலி ஆகியோர் பெற்றனர்.

சிறந்த உடை வடிவமைப்பாளர்

சிறந்த உடை வடிவமைப்பாளர்

சிறந்த உடை வடிமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை மிலேனா கேனனெரா பெறுள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பேர்ட்மேன் படத்துக்காக இம்மானுவல் லுபஸ்கி பெற்றார்

சிறந்த காஸ்ட்யூம்

சிறந்த காஸ்ட்யூம்

சிறந்த காஸ்ட்யூம் டிசைனுக்கான விருதினை தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் படத்துக்காக மிலெனா கெனோனரோ பெற்றார்.

சிறந்த எடிட்டிங்

சிறந்த எடிட்டிங்

சிறந்த படத் தொகுப்புக்கான விருதினை டாம் க்ராஸ் பெற்றுக் கொண்டார். விப்லாஷ் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

சிறந்த புரொடக்ஷன் டிசைன்

சிறந்த புரொடக்ஷன் டிசைன்

சிறந்த புரொடக்ஷன் டிசைனுக்கான விருதும் தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் படத்துக்கே கிடைத்தது. ஆடம் ஸ்டாக்ஹோஸன் மற்றும் அன்னா பென்னாக் இந்த விருதினைப் பெற்றனர்.

சிறந்த கிராபிக்ஸ் சாதனை

சிறந்த கிராபிக்ஸ் சாதனை

சிறந்த கிராபிக்ஸ் சாதனை விருது இன்டர்ஸ்டெல்லார் படத்துக்குக் கிடைத்துள்ளது.

பால் பிராங்ளின், ஆன்ட்ரூ லாக்லி, இயான் ஹன்டர் மற்றும் ஸ்கார் பிஷருக்கு இந்த விருது கிடைத்தது.

English summary
The 87th Academy Awards are announced. JK Simmons and Patricia Arquette are received the award for best supporting roles in Whiplash and Boyhood respectively.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil