என்னது...சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது ஜெய்பீம் படத்திற்கா... லீக் செய்த தொகுப்பாளர்

லாஸ் ஏஞ்சல்ஸ் : சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது ஜெய்பீம் படத்திற்கு வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ட்வீட் செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது உண்மை தானா என பலரும் கேட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், திரைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமாத்துறையின் மிக உயரிய விருதாகவும், கெளரவமாகவும் பார்க்கப்படுவது ஆஸ்கார் விருதுகள். இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு, இரண்டு மாதங்கள் தாமதமாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.

ஆஸ்கார் விருது விழா எப்போ

ஆஸ்கார் விருது விழா எப்போ

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான, அதாவது 94வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. 2021 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதிற்காக 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் Shortlist 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் இறுதிப்பட்டியல் இன்று(பிப்ரவரி 8) வெளியிடப்பட உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட இந்த பட்டியலின் மீதான ஓட்டுப்பதிவு மார்ச் 17ம் தேதி துவங்கி, மார்ச் 22 வரை நடைபெறும். இந்த ஓட்டுக்களின் அடிப்படையிலேயே 94வது ஆஸ்கார் விருதுகள் மார்ச் 27ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன.

நாமினேஷனில் 2 இந்திய படங்கள்

நாமினேஷனில் 2 இந்திய படங்கள்

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்கான இந்தியாவில் இருந்து சூர்யா நடித்த ஜெய்பீம் மற்றும் மோகன்லால் நடித்த மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்மம் ஆகிய படங்கள் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. இதில் சூர்யா நடித்த ஜெய்பீம் ஏற்கனவே சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்திற்கு நிச்சயம் விருது கிடைக்கும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த படம் ஜெய்பீமா

சிறந்த படம் ஜெய்பீமா

அமெரிக்க நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆஸ்கார் நாமினேஷன் பட்டியல் வெளியீட்டை Jacqueline Coley தொகுத்து வழங்க உள்ளார். Rotten Tomatoes எடிட்டரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறந்த படம் ஜெய்பீம். என்னை நம்புங்கள். இந்த படம் தான் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டு, உண்மைதானா என கேட்டு வருகின்றனர்.

அப்போ எதுக்கு ஓட்டெடுப்பு

அப்போ எதுக்கு ஓட்டெடுப்பு

அதே சமயம் ஆஸ்கார் நாமினேஷன் பட்டியலே இன்று தான் வெளியிட போகிறார்கள். இனி இந்த பட்டியல் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, அதற்கு பிறகு தானே விருதுகள் முடிவு செய்யப்படும். ஆனால் நாமினேஷன் பட்டியல் வெளியாவதற்கு முன்பே இவர் எப்படி சிறந்த படம் ஜெய்பீம் தான் என சொல்கிறார். அப்படியானால் யாருக்கு எந்த விருது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதா...அப்படியானால் எதற்காக ஓட்டெடுப்பு நடத்துகிறார்கள் என பலரும் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

ஜாக்குலின் கொடுத்த விளக்கம்

ஜாக்குலின் கொடுத்த விளக்கம்

இதற்கு பதிலளித்த ஜாக்குலின், ஜெய்பீம் ரசிகர்களுக்கு...எனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்தது. அந்த படம் நாமினேட் செய்யப்படுமா, இல்லையா என்பது பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. ஆனால் அப்படி நடந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். உங்களின் அன்பிற்கு நன்றி. ஆனால் உள்ளே நடப்பது பற்றி என்னிடம் தகவலும் இல்லை. நாளை நடப்பதற்காக வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X